மேலும் அறிய

Healthy Tips: தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டியது ஏன்? தெரிஞ்சுக்கோங்க!

Healthy Tips: உடற்பயிற்சி செய்ய வேண்டியதின் அவசியத்தை பற்றி இந்தக் கட்டுரையில் காணலாம்.

பணி சூழல் காரணமாக மாறிவரும் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்டவைகள் காரணமாக சிலருக்கு உடல் பருமன், ஹார்மோன் சீரின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இதற்கு ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை காணலாம். 

உடற்பயிற்சி:

தினமும் உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தூங்குவது, சரிவிகித உணவு என வாழ்க்கை முறை இருந்தாலே ஆரோக்கியமான உடல்நிலை இருக்கும். இல்லையெனில், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. உடல்நலனும் மனநலனும் ஆரோக்கியமாக இருக்க உங்கள் உடலில் நிகழும் மாற்றங்களை கவனிக்க வேண்டும்.

அதோடு, தினமும் உடற்பயிற்சி அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றனர். நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதற்கான மெசேஜை உடல் உங்களுக்கு வழங்கும். அது எஎன்னென்ன என்பது பற்றி கீழே காணலாம்.

 சோர்வான உணர்வு

ஒரு நாளில் போதுமான அளவு தூங்கினாலும் சோர்வாகவோ, உடலில் எனர்ஜி இல்லை என்றோ உணர்ந்தால் அவசியம் சிறிதளவிலான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நடைப்பயிற்சி, யோகா என குறைந்தது 30 நிமிடங்களாவது செய்ய வேண்டும். வாரத்திற்கு 5 நாட்களாகவது உடற்பயிற்சி செய்ய மறந்துடாதீங்க.

உடல் எடை அதிகரிப்பு

உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், அளவோடு உணவுகளை சாப்பிடாலும் உடல் எடை அதிகரித்திருக்கும். இதனால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும். 

மூட்டு வலி

உடல் எடை அதிகரிப்பினால் மூட்டு வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ரொம்ப காலமாக உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் உடலில் ஃப்ளக்ஸிபிளிட்டி இருக்காது. 

மனநலம் பாதிக்கும்

உடல்நலம் சரியில்லை என்றால் மனநலன் பாதிக்கபடும் . மனசோர்வு, மன அழுத்தம், எரிச்சலுணர்வு உள்ளிட்டவைகள் ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது. சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி உடல் ஆரோக்கியத்திற்கும் சுறுசுறுப்பாக இருக்கவும் மிகவும் அவசியமானதாகும். தினமும் வாக்கிங், ஜாகிங் செய்வதை பழக்கமாக்கவும். இது மனநலனையும் மேம்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறையும்

உடற்பயிற்சி செய்யாமலே இருந்தால் உடலின் நோய் எதிர்ப்பு திறன் பாதிப்படையும். அடிக்கடி, சளி தொல்லை உள்ளிட்ட நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதே இதற்கு தீர்வு. 

தூக்கமின்மை

சீரான உடற்பயிற்சி இல்லாததால் தூங்குவதில் சிக்கல் ஏற்படலாம். போதுமான அளவு தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சியான உணர்வு இருக்காது. தூக்கத்தின் க்வாலிட்டியும் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள். தூங்குவதற்கு முன்பு தீவிரமாக உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்கவும். 

புத்துணர்ச்சி அளவு மாறுபாடு

அன்றாட வேலைகளை செய்ய ஆற்றல் இல்லாத உணர்வு மேலெழும். உடற்பயிற்சி செய்தால் இவற்றை தடுக்கலாம். 

மூச்சு விடுவதில் சிக்கல்

உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் சுவாச கோளாறுகள் ஏற்படலாம். ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற உணர்வு. இதனால்,அதிகமாக இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அடிக்கடி பசியுணர்வு ஏற்படும். ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட தோன்றும். சரிவிகித உணவுடன் சீரான உடற்பயிற்சி இதை தடுக்கும். 

தீர்வு என்ன?

  • தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்தவும். வாரம் முழுவதும் செய்ய முடியவில்லை என்றாலும் 5 அல்லது 2 நாட்கள் என தொடங்குங்கள். பிறகு, அதை பழக்கப்படுத்தவும்.
  • உங்களை நீங்களே ஊக்கப்படுத்த முயற்சிக்கவும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை மட்டும் நோக்கமாக கொள்ளவும். 
  • உங்களுக்கு பிடித்த உடற்பயிற்சியை தேர்ந்தெடுக்கவும்.

பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking; காலையிலே பரபரப்பு! மயிலாடுதுறையில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை - என்ன நடக்கிறது?
Breaking; காலையிலே பரபரப்பு! மயிலாடுதுறையில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை - என்ன நடக்கிறது?
TN GOVT: 10 ஆண்டுகால கோரிக்கை.. 47013 குடும்பங்களின் வயிற்றில் பாலை வார்த்த தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை பணிகள் நிரந்தரம்
TN GOVT: 10 ஆண்டுகால கோரிக்கை.. 47013 குடும்பங்களின் வயிற்றில் பாலை வார்த்த தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை பணிகள் நிரந்தரம்
Husband Suicide: வேலை, பணம் போதாது.. ”அவளுக்கு உன் உயிர் தான் தேவை”.. மனைவி கொடுமை, கணவன் தற்கொலை
Husband Suicide: வேலை, பணம் போதாது.. ”அவளுக்கு உன் உயிர் தான் தேவை”.. மனைவி கொடுமை, கணவன் தற்கொலை
TN Fishermen: என்று தணியும் இந்த கொடுமை? மீனவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை, 13 பேர் கைது
TN Fishermen: என்று தணியும் இந்த கொடுமை? மீனவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை, 13 பேர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Nainar Nagendran | ”மோதி பாக்கலாம் வா”அ.மலை Vs நயினார்! தமிழக பாஜக தலைவர் யார்? | BJPSaif Ali Khan Attacker | ’’கல்யாணம் நின்னு போச்சு..’’போலீசால் கதறும் நபர் சைஃப் அலிகான் விவகாரம் | Akash KanojiaNitish Kumar Son Nishant Political Entry | மகனின் திடீர் அரசியல் ஆசைநிதிஷ் போடும் கணக்கு நெருக்கடியில் பாஜகDurai Murugan  | கண்டுகொள்ளாத திமுக தலைமை?வருத்தத்தில் துரைமுருகன்! மகன் கதிர் ஆனந்தின் எதிர்காலம்? | Kathir Anand

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking; காலையிலே பரபரப்பு! மயிலாடுதுறையில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை - என்ன நடக்கிறது?
Breaking; காலையிலே பரபரப்பு! மயிலாடுதுறையில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை - என்ன நடக்கிறது?
TN GOVT: 10 ஆண்டுகால கோரிக்கை.. 47013 குடும்பங்களின் வயிற்றில் பாலை வார்த்த தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை பணிகள் நிரந்தரம்
TN GOVT: 10 ஆண்டுகால கோரிக்கை.. 47013 குடும்பங்களின் வயிற்றில் பாலை வார்த்த தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை பணிகள் நிரந்தரம்
Husband Suicide: வேலை, பணம் போதாது.. ”அவளுக்கு உன் உயிர் தான் தேவை”.. மனைவி கொடுமை, கணவன் தற்கொலை
Husband Suicide: வேலை, பணம் போதாது.. ”அவளுக்கு உன் உயிர் தான் தேவை”.. மனைவி கொடுமை, கணவன் தற்கொலை
TN Fishermen: என்று தணியும் இந்த கொடுமை? மீனவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை, 13 பேர் கைது
TN Fishermen: என்று தணியும் இந்த கொடுமை? மீனவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை, 13 பேர் கைது
IND Vs ENG 3rd T20:  டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? இங்கிலாந்து போராடுமா? ராஜ்கோட்டில் இன்று 3வது டி20 போட்டி
IND Vs ENG 3rd T20: டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? இங்கிலாந்து போராடுமா? ராஜ்கோட்டில் இன்று 3வது டி20 போட்டி
IPL 2025: 14வது ஆண்டில் முதல் கோப்பை! RCB-யும் வரலாறு படைக்குமா? ஏக்கத்தில் ரசிகர்கள்
IPL 2025: 14வது ஆண்டில் முதல் கோப்பை! RCB-யும் வரலாறு படைக்குமா? ஏக்கத்தில் ரசிகர்கள்
WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை  - எந்த ரூட் தெரியுமா?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை - எந்த ரூட் தெரியுமா?
Embed widget