மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Hair: தலைமுடி ஏன் நரைக்கிறது..? இளநரைக்கு தீர்வுதான் என்ன?

நமக்கு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் தலைமுடி நரைக்கத் தொடங்கிவிடும். சிலருக்கு மோசமான கேச பராமரிப்பு காரணமாக இளமையிலேயே முடி நரைக்கும். சிலருக்கு மரபணு கோளாறு காரணமாக முடி நரைக்கும்.

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் தலைமுடி நரைக்கத் தொடங்கிவிடும். சிலருக்கு மோசமான கேச பராமரிப்பு காரணமாக இளமையிலேயே முடி நரைக்கும். இன்னும் சிலருக்கு மரபணு கோளாறு காரணமாக முடி நரைக்கும். ஆனால் எப்போதாவது நான் முடி ஏன் நரைக்கிறது, எப்படி நரைக்கிறது என்று யோசித்துப் பார்த்துள்ளோமா?

முடி நரைப்பதற்கு காரணம்?

ஆனால் முடி நரைப்பது ஏன் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து அதனை மருத்துவ இதழிலும் வெளியிட்டுள்ளனர். முடி நரைத்தலுக்கும் பிக்மென்ட் செல்கள் அதாவது நிறத்தைக் கொடுக்கும் செல்களுக்கும் இடையே தொடர்பு இருக்கிறதாம். நேச்சர் (Nature) என்ற இதழில் இந்த ஆய்வறிக்கையின் விவரம் வெளுயாகியுள்ளது. மனிதருக்கு வயது ஏற ஏற ஸ்டெம் செல்கள் ஸ்தம்பித்துவிடும். அப்போது கேசத்தால் நிறத்தை பராமரிக்க இயலாமல் போய்விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலிகள் மற்றும் மனிதர்களின் தோலில் உள்ள செல்களைக் கொண்டு இந்த ஆராய்ச்சி நடந்தப்பட்டுள்ளது. மெலனோசைட் என்ற ஸ்டெம் செல்கள் தான் முடியின் நிறத்திற்கு முக்கியமான ஆதாரமாக இருக்கிறது. இந்த ஆராய்ச்சியை அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தி க்ராஸம் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அந்த ஆராய்ச்சியாளர்கள் சில ஸ்டெம் செல்களுக்கு ஹேர் ஃபாலிக்கல்ஸ் எனப்படும் கேசத்தின் வேர்களினுள் இருக்கும் வளர்ச்சியை தூண்டும் இடத்திற்கு செல்லும் சக்தி இருக்கும். ஆனால் அது அவ்வாறு பயணிக்கும் சக்தியை இழந்துவிட்டால் கேசம் நரைக்க ஆரம்பித்துவிடும். அப்படி ஸ்தம்பிக்கும்போதே நரைக்க ஆரம்பிக்கிறது.

மெலனோசைட் ஸ்டெம் செல்கள்

நமது கேசத்தின் நிறம் McSC செல்களால் (மெலனோசைட் ஸ்டெம் செல்கள்) ஆனவை. McSC செல்கள் பிளாஸ்டிக் தன்மை கொண்டவை. அப்படியென்றால் முடி நன்றாக வளரும்போது இந்த செல்கள் அங்குமிங்கும் நகர்கின்றன. இவை புரதத்தையும் சுமந்து செல்கின்றன. மெலனோசைட் ஸ்டெம் செல்கள் McSC தான் இயற்கையான ஹேர் கலர் ஏஜண்ட் என்று ஆராய்ச்சியின் தலைவர் கி சன் தெரிவித்துளார்.

கி சன் மேலும் கூறுகையில், தங்கள் குழுவின் ஆராய்ச்சி தடைபட்டு ஸ்தம்பித்த செல்களை ஊக்குவிப்பதன் மூலம் நரைத்தலை தள்ளிப்போடுவதற்கான ஆராய்ச்சிகளுக்கு வழி வகுக்கும் என்று கூறியுள்ளார். எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையில், வயதாகும் போது முடி உதிர்ந்து பின்னர் வேறு முடி வளரும். இதுவே தொடரும்போது ஒரு கட்டத்தில் மெலனோசைட் ஸ்டெம் செல்கள் ஓரிடத்தில் தேங்கிக் கொள்கின்றன.

இளநரையும் மருத்துவமும்

உடலில் அளவுக்கு அதிகமாக பித்தம் இருப்பதால் இந்த நரை உண்டாகிறது. அதனால் தான் இது பித்த நரை என்று சொல்லப்படுகிறது. உடலில் பித்தம் அதிகம் சுரப்பை கட்டுப்படுத்தும் உறுப்பு கல்லீரல் தான். இரத்தத்தில் பைல் என்னும் பித்த நீர் அதிகமாக சுரந்தால் இந்த நிலை உண்டாகலாம். தைராய்டு கோளாறு அல்லது வைட்டமின் பி-12 குறைபாடு காரணமாக, சிலரின் தலைமுடி விரைவில் நரைத்துவிடும். இன்றைய காலகட்டத்தின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசு மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களும் தலையில் வெள்ளை முடி தோன்றுவதற்குக் காரணம்.

இள நரையைத் தடுக்க வேண்டுமானால், வைட்டமின்கள் நிறைந்த எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு, அன்னாசி, தர்பூசணி, உருளைக்கிழங்கு, கொடைமிளகாய், சோயாபீன், முழு தானியங்கள், முட்டை, அரிசி, ஸ்ட்ராபெரி, கிவி, பால், மீன்,  சிக்கன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget