மேலும் அறிய

உயர் ரத்த அழுத்தம் ஆண் மலட்டுத்தன்மைக்குக் காரணமா? - ஆராய்ச்சி சொல்வது என்ன?

25 ஆண்களில் ஒருவர் குழந்தைப்பேறு இன்மையால் பாதிக்கப்படுகிறார். அனைத்து கருவுறாமைகளிலும் சுமார் 30 சதவிகிதம் ஆண்களால் ஏற்படுகிறது

ஆண்பாலின் விந்தணு உற்பத்தித்தன்மை அவர்களது உடல் நிறை குறியீட்டெண் சார்ந்தது. உடல் பருமன் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தைக் குறைக்கும் என ஒரு ஆய்வு கூறுகிறது. கூடுதல் உடல் எடை கருவுறுதல் தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்தும். சாதாரண எடை கொண்ட ஆண்களை விட அதிக எடை கொண்ட ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவாக உள்ளது என்பது அதிகம் அறியப்படாத உண்மை. ஆனால் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை விட ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் அரிதாகவே விவாதிக்கப்படுகிறது. மேலும் ஆண்களின் இனப்பெருக்கமின்மை அங்கீகரிக்கப்பட்டாலும் கூட தனிப்பட்ட அளவில் ஒரு மனிதன் தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத சூழலில் சமூகம அவரை மரியாதையுடன் நடத்துவதில்லை.

இதுகுறித்து IVF நிபுணர்கள் கூறுகையில், “ஒரு தம்பதியினர் கருத்தரிக்க முடியாமல் போகும் போது, ​​பெண் தான் குற்றம்சாட்டப்படுவார் என்கிற கருத்து நிலவுகிறது. ஆனால் அது தவறு, பெண்களுக்குதான் குழந்தை பேற்றில் அதிக பங்கு இருப்பதால் அது அவ்வாறு பார்க்கப்படுகிறது. 

குழந்தைப்பேற்றில் பிரச்னை என்பது ஆண் பெண் இருவருக்கும் உள்ள அடிப்படைக் கோளாறுகளில் ஏற்படுவதாக மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் நிபுணர்கள். “ஒரு தம்பதியினர் கர்ப்பமாக இருப்பதில் சிக்கல் இருந்தால், பெண் தான் காரணம் என்று கருதுவது பொதுவானது. இருப்பினும், பெண் மலட்டுத்தன்மையைப் போலவே ஆண் மலட்டுத்தன்மையும் காரணமாக இருக்கலாம்.

ஆண் மலட்டுத்தன்மையின் அறிகுறிகள் மற்றும் காரணங்களைச் சுற்றி நிறைய மர்மங்கள் இருப்பதால், ஒரு தம்பதியினரின் குழந்தைப் பேறு திறனைப் பற்றி மேலும் அறிய, ஆண் மலட்டுத்தன்மையைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பகிர்கிறார்கள் மருத்துவர்கள், அதாவது, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் கருவுறுதலை பாதிக்கிறது. விந்தணுவின் தரம் ஒரு ஆணின் குழந்தைப்பேறுத் தன்மையின் முக்கிய அங்கமாகும், ஆனால் அது மட்டும் ஒரே காரணம் அல்ல. ஹார்மோன் அளவுகள், உடல் பருமன், புகைபிடித்தல், மது மற்றும் சில மருந்துகள் அத்தனையும் கருவுறுதலை பாதிக்கும். அடுத்து, கருவுறாமை ஆண்களையும் பெண்களையும் சமமாக பாதிக்கிறது. பெண்ணின் மலட்டுத்தன்மையைப் போலவே ஆணிலும் மலட்டுத்தன்மை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 25 ஆண்களில் ஒருவர் குழந்தைப்பேறு இன்மையால் பாதிக்கப்படுகிறார். அனைத்து கருவுறாமைகளிலும் சுமார் 30 சதவிகிதம் ஆண்களால் ஏற்படுகிறது, மேலும் 30 சதவிகிதம் பெண்களால்  ஏற்படுகிறது. மீதமுள்ள 30 - 40 சதவிகிதம் ஆண் மற்றும் பெண் மலட்டுத்தன்மையின் கலவையாகும் அல்லது அதற்கான சரியான காரணம் தெளிவாக இல்லை. 

ஒருவரின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் உள்ள சிரமங்களைத் தவிர, பல்வேறு சூழ்நிலைகளால் கருவுறாமை ஏற்படலாம். மனித உடல் என்பது ஒரு சிக்கலான அமைப்பு, இதில் ஒவ்வொரு செயல்பாடும் பிற செயல்பாட்டுடன் இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, உயர் இரத்த அழுத்தம் என்பது விந்தணுவின் அளவு, தரம் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் நேரடி விளைவைக் கொண்டிருப்பதை பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதிகரித்துள்ள சுற்றுச்சூழல் அழுத்தங்கள், அத்துடன் அபாயகரமான உணவுகள் மற்றும் மருந்துகளின் பயன்பாடு ஆகியவற்றால் காலப்போக்கில் விந்தணுக்களின் ஆரோக்கியம் குறைவதைக் கண்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Embed widget