Watch Video | ரசகுல்லா சாட்டும்.. தயிரும்.. இண்டர்நெட்டை கலக்கும் காம்பினேஷன்.. வைரல் வீடியோ..!
ரசகுல்லா சாட்டும், தயிரும் வைத்து ஒரு ரெசிப்பி செய்யும் வீடியோவை ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சமூகவலைதளங்களில் எப்போதும் உணவு சார்ந்த வீடியோக்கள் எப்போதும் வைரலாவது வழக்கம். அதுவும் அந்த உணவில் சில வித்தியாசமான பொருட்கள் சேர்ந்து செய்தால் அந்த வீடியோ பல லட்சம் பேரை எளிதாக சென்றடையும். அந்தவகையில் தற்போது ரசகுல்லா வைத்து ஒருவர் செய்யும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் ரசகுல்லாவை வைத்து எப்படி சேட் செய்கிறார் என்பதை பார்த்தால் நீங்களே சற்று ஆர்வம் அடைந்து விடுவீர்கள்.
அதன்படி ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவில் முதலில் இரண்டு ரசகுல்லாவை எடுத்து கொள்கிறார்கள். அதன்பின்னர் அதில் முந்திரி,பாதம் பருப்பு, தயிர், சாஸ் உள்ளிட்ட பல ஐட்டங்களை மழைச் சாரல் போல தூவி ஒரு ருசியான சேட் உணவை தயாரிக்கிறார். அந்த சேட் வகையை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் இந்த சேட் தொடர்பான வீடியோவை தற்போது வரை 97 ஆயிரும் பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.
We are doomed. Rasgulla chaat!! pic.twitter.com/tjRZ4lcMVl
— Kaptan Hindustan™ (@KaptanHindostan) October 19, 2021
அத்துடன் பலரும் இந்த ரசகுல்லா சேட் வகை தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக பலரும் இந்த ரசகுல்லா வகை மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறி வருகின்றனர். மேலும் சிலர் இந்த வகையான சேட் வகை எங்கு கிடைக்கிறது என்றும் பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டி வருகின்றனர். அதேபோல் மற்ற சிலர் இதை ஏன் எப்படி செய்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Every Bengali after watching this pic.twitter.com/DZO67O5zQk
— Souvik Majumder (@Souvik_Dec25) October 19, 2021
But I will find you and make you regret doing this pic.twitter.com/tof6A0rcfS
— Saurya (@Sauryavanshi111) October 19, 2021
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: 2 கிலோ எடை... 24 கேரட் தங்க மோமோஸ்... எங்கு கிடைக்கிறது தெரியுமா?- வைரல் வீடியோ !