Raisin water: உலர் திராட்சை உடல் எடையை குறைக்க உதவுமா? நிபுணர்கள் சொல்வதென்ன?
Raisin water: உலர்ந்த திராட்சை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என காணலாம்.

திராட்சை அல்லது கிஸ்மிஸ் பழம் என்று சொல்ல கூடிய இதில் நார்ச்சத்து, ஆன்டி - ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது. இது உடலிலுள்ள நச்சுக்களை நீக்க உதவும். செரிமான திறனை மேம்படுத்தும். இருப்பினும்,. அளவோடு திராட்சை சாப்பிடுது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
திராட்சை தண்ணீர்:
கோடை காலத்தில் காலையில் வெறும் வயிற்றில் திராட்சை தண்ணீர் குடிப்பதன் நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ரோஹினியின் அறிவுரைகளை காணலாம். இரவு 10-15 வரையில் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் அதை நன்றாக மிக்ஸியில் அரைத்து அப்படியே குடிக்க வேண்டும். இதனால் பல நன்மைகள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர் தெரிவிக்கிறார்.
நன்மைகள் என்னென்ன?
உலர் திரைட்சையில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருக்கிறது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை தரும். கொழுப்பு குறைவாக இருக்கிறது. அதோடு நார்ச்சத்து அதிகம் என்பதால் செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவும். மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க உதவும்.
இது ஆன்டி - ஆக்ஸிடண்ட் நிறைந்தது என்பதால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. குறிப்பாக, உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது ரொம்பவே நல்லது.
உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து செய்யப்படும் raisin water கோடை காலங்களில் உடலில் நீர்ச்சத்து நிறைந்திக்க உதவும். இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் 10-15 திராட்சையை 24 மணி நேரம் ஊற வைத்து அதை தினமும் சாப்பிட்டு வரலாம். இதிலுள்ள பொட்டாசியம், கால்சியம் ஹீமோகுளோபொன் குறைபாட்டை சரி செய்யும்; தடுக்க உதவும்.
குடல் ஆரோக்கியம் மேம்படும்
இதில் உள்ள சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. குடல் சீராக இயங்கவும் உதவும். குடல் நலம் சீராக இருந்தாலே உடல்நலனுக்கு பெரிதாக பாதிக்கப்புகள் ஏற்படாமம் பார்த்துகொள்ள முடி.
பசியைக் கட்டுப்படுத்தும்
சிலருக்கு ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற க்ரேவிங் இருக்கும். அப்படியான சமயங்களில் சிறிதளவு உலர் திராட்சைகளை சாப்பிடலாம். நார்ச்சத்து அதிக,ம் என்பதால் உங்களுக்கு நீண்ட நேரம் பசி உணர்வு ஏற்படாது. ஓட்ஸ், சாலட், உள்ளிட்ட உணவுகளில் உலர் திராட்சையை சேர்த்து கொள்ளலாம்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

