(Source: ECI/ABP News/ABP Majha)
Prawn Kola Urundai Gravy: இறாலில் ஒரு அசத்தல் ரெசிபி...இறால் கோலா உருண்டை குழம்பு செய்முறை பார்க்கலாம் வாங்க!
இறால் கோலா உருண்டை குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
கடல் உணவுகளில் இறாலின் சுவை அற்புதமாக இருக்கும். இறாலில் ப்ரை, கிரேவி, தொக்கு ஆகியவற்றை நாம் முயற்சி செய்திருப்போம். ஆனால் இறால் கோலா உருண்டை குழம்பை அனைவரும் ட்ரை பண்ணிருக்க மாட்டோம். இப்போ சுவையான இறால் கோலா உருண்டை குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
இறால் - முக்கால் கிலோ, கடலை மாவு - அரை கப், பெரிய வெங்காயம் - 3, சின்ன வெங்காயம் - 160 கிராம், பெரிய சைஸ் தக்காளி - 4, மீன் வறுவல் மசாலா - 50 கிராம், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - சிறிதளவு, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சோம்பு- 1 டீஸ்பூன், சீரகம்- 1 டீஸ்பூன், கசகசா - 1 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை
முதலில் நன்றாக சுத்தம் செய்த இறாலை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து எடுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். சின்னவெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
சின்ன வெங்காயம், சோம்பு, சீரகம், கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். தேங்காயை மிக்சியில் சேர்த்து மைய அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை சேர்த்து அதனுடன் மீன் வறுவல் மசாலா, மிளகுத்தூள், இஞ்சி - பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன், அரைத்து வைத்த வெங்காய விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒவ்வொரு இறாலாக எடுத்து, மாவுடன் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வெறொரு கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் கறிவேப்பிலை கொண்டு தாளித்து, பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி - பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி குழைந்ததும், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை , உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கிய பின்னர், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிட வேண்டும். பின் இதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சற்று கெட்டியான பதம் வந்ததும், இறால் உருண்டைகளை இதில் சேர்த்து குறைவான தீயில் வேகவிட வேண்டும். இப்போது இதன் மீது சிறிது நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் இறால் கோலா உருண்டை ரெடி.
மேலும் படிக்க
"அவங்க என்ன தப்பு செஞ்சாங்க" - மணிப்பூரில் கடத்தி கொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கதறல்