சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார். திருச்சியில் 10 கி.மீ ரோட் ஷோ நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அறிய
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP
- சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி - திருச்சியில் 10 கி.மீ ரோட் ஷோ செல்ல ஏற்பாடுகள் தீவிரம்
- கியாஸ் தட்டுப்பாடு தொடர்பாக உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை - மாற்று ஏற்பாடு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனும் ஆலோசிக்கவும் முடிவு.
- சென்னையில் தங்கம்விலை கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 15 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை
- சென்னையில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக,பல உணவகங்களில் "சாப்பாடு கிடையாது" என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது
- தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்
- "காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான் என்றெண்ணி மகிழ்ச்சியுடன் தேர்வறைக்குள் செல்லுங்கள். All the Best" - அன்பில் மகேஸ், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
- சென்னையில் பல பெட்ரோல் பங்குகளில் CNG தட்டுப்பாடு - அதிகாலையிலேயே வரிசையில் காத்திருந்த ஆட்டோக்கள்
- காரைக்குடியில் விறகு விலை உயர்வு - வர்த்தக எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விறகு அடுப்புக்கு மாறிய சமையலர்கள் - ஒரு டன் விலை ரூ.2000 ஆயிரம் அதிகரித்து ரூ.80000-க்கு விற்பனை
- திருவள்ளூர் மாவட்டம் பெருவாயலில் சவுடு மண் அள்ள அரசு அதிகாரிகளின் துணையோடு ஏரி கரையை உடைத்து நீரை வெளியேற்றும் ஒப்பந்ததாரர் - பொதுமக்கள் குற்றச்சாட்டு
- "விஜயை தலைவராக ஏற்றுக்கொண்ட செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமியை ஏன் ஏற்க முடியவில்லை?.. அந்த கட்சியில சின்ன பசங்க எல்லாம் செங்ஸ் ப்ரோன்னு கூப்பிடுறாங்க.. இப்படி ஒரு அவமானம் தேவை தானா..?" - அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளர் காளிதாஸ் ஆவேசம்..
- நீட் தேர்வு - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
- காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் - தப்பியோடிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
Frequently Asked Questions
தமிழ்நாட்டிற்கு இன்று யார் வருகை தருகிறார்?
சென்னையில் இன்று தங்கம் விலை எப்படி உள்ளது?
சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 15,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறதா?
ஆம், தமிழ்நாடு முழுவதும் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. சுமார் 9 லட்சம் மாணவர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர்.
சென்னையில் CNG தட்டுப்பாடு நிலவுகிறதா?
ஆம், சென்னையில் பல பெட்ரோல் பங்குகளில் CNG தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ஆட்டோக்கள் அதிகாலையிலேயே வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள் என்ன?
நீட் தேர்வு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
























