Asian Games 2023 LIVE: 100 பதக்கங்கள் குவிப்பு.. கபடியிலும் கிரிக்கெட்டிலும் தங்கம் வென்று இந்திய ஆண்கள் அணி அசத்தல்
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெறும் பல்வேறு விளையாட்டுகள் தொடர்பான தகவல்களை இங்கு உடனுக்குடன் அறியலாம்.

Background
Asian Games 2023 LIVE: கிரிக்கெட்டில் தங்கத்தை தனதாக்கிய இந்தியா
ஆண்கள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
Asian Games 2023 LIVE: கபடியில் தங்கம் வென்ற இந்தியா
ஈரான் அணிக்கு எதிரான கபடி இறுதிப் போட்டியில் இந்திய அணி 33-29 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்று, தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
Asian Games 2023 LIVE: ஈரான் வீரர்கள் போராட்டம்
இந்தியாவுக்கு சாதகமாக புள்ளிகள் வழங்கக்கூடாது என ஈரான் வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கபடி இறுதிப்போட்டி - வாக்குவாதத்தில் போட்டி நிறுத்தம்
இந்தியா - ஈரான் இடையேயான கபடி இறுதிப்போட்டியில் புள்ளிகளை வழங்குவதில் ஏற்பட்ட குழப்பத்தால், போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது
பேட்மிண்டனில் தங்கம் வென்று புதிய வரலாறு
அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக உலக நம்பர் 1 ஜோடியாக மகுடம் சூடவுள்ள சாத்விக் மற்றும் சிராக் ஜோடி, தென்கொரியாவின் சோய் சோல்கியு மற்றும் கிம் வோன்ஹோ ஆகியோரை வீழ்த்தி பேட்மிண்டனில் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. சாத்விக் மற்றும் சிராக் ஜோடி 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.