மேலும் அறிய

Fried Poha : இட்லி, தோசை சாப்பிட்டு போரடிச்சு போச்சா? வறுத்த அவல் ரெசிப்பியில் கலக்குங்க..

காலை உணவுல உங்களுடைய ஃபேவரைட் என்ன? இட்லி, தோசை சாப்பிட்டு போரடிச்சு போச்சா? வறுத்த அவல் ரெசிப்பியில் கலக்குங்க..

நம்மில் பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசைதான் பிரதான பிரேக் பாஸ்ட் உணவு. இதைக்கூட சாப்பிட்டு விடலாம், ஆனால் அந்த உப்புமா மட்டும் வேண்டும் என்பது தான் பலரின் மைண்ட் வாய்ஸ். இப்போதெல்லாம் அதிகமான பெண்கள் அலுவலக வேலைகளுக்கு செல்லக்கூடியவர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் காலையில் எழுந்ததும் வெறும் இரண்டு மணிநேரத்தில் டீ, காலை உணவு, மதியத்திற்கு சாதம், குழம்பு ஒரு சைட்டிஷ் ஆகியவற்றை குறைந்தபட்சம் செய்தாக வேண்டும்.

இந்த நேர பற்றாக்குறைதான் குறைந்த நேரத்தில் சமைக்கக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சமைக்க காரணம். ஆனால் வீட்டில் உள்ள குழந்தைகளோ தினந்தோறும் ஒரே மாதிரியான காலை உணவை சாப்பிட்டு போரடித்து விட்டால் சரியாக சாப்பிட மாட்டார்கள். எனவே புதியதாக, சுவையாக ஏதேனும் காலை உணவை தயார் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அப்படி நீங்கள் புதிதாக எதையாவது, ட்ரை பண்ண விரும்பினால், அவல் ரெசிப்பி செய்து பாருங்க. குறைந்த நேரத்தில் ரொம்ப ஈசியா செய்திடலாம். வாங்க ஃப்ரைடு அவல் எப்படி? செய்வதென்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் 

1 கப் தட்டை அவல், 1/4 கப் மஞ்சள் நிற குடை மிளகாய், 1/4 கப் சிவப்பு நிற குடை மிளகாய்,  4 பீன்ஸ், 1 கேரட், சிறிதளவு வெங்காயத் தாள், 1/2 ஸ்பூன் மிளகு தூள், சிறிது கோஸ்,  உப்பு தேவையானஅளவு, எண்ணெய் தேவையான அளவு. 

ஃப்ரைடு அவல் செய்முறை

அவலை தண்ணீரில் கழுவி வடிகட்டி 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். 1 கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து,  குடை மிளகாய், பீன்ஸ், கோஸ், கேரட் மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து மிதமான சூட்டில் அரை பதமாக வேகவைக்க வேண்டும்.  காய்கறிகள் வதங்கியதும் அதனுடன் ஊறவைத்த அவல், மிளகுத்தூள்,  உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். எல்லாம் நன்றாக மிக்ஸ் ஆனதும், இறுதியாக சிறிது வெங்காயத் தாளையும் சேர்த்து கலந்து விடவும். இப்போது டேஸ்டியான அவல் ஃப்ரைட் ரைஸ் தயார். இதை நீங்கள் சட்னி வைத்தும் பறிமாறலாம், அப்படியே கூட சாப்பிடலாம்... 

குறிப்பு: நீங்கள் வெள்ளை நிற அவலுக்கு பதில் சிவப்பு நிற அவலையும் தேர்ந்தெடுக்கலாம். சிவப்பு நிற அவலில் சத்துகள் சற்று கூடுதலாக இருக்கும் என சொல்லப்படுகின்றது. 

மேலும் படிக்க 

Mark Antony Box Office: 9 நாட்களில் மார்க் ஆண்டனி படம் செய்த சாதனை.. பட்டையைக் கிளப்பும் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

IND vs AUS 2nd ODI LIVE: இந்தூரில் வானவேடிக்கை.. அதிரடியாக சதம் விளாசிய ஸ்ரேயஸ் ஐயர் - மிரளும் அஸ்திரேலியா

தலைப்பு செய்திகள்

’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
Embed widget