மேலும் அறிய

Mark Antony Box Office: 9 நாட்களில் மார்க் ஆண்டனி படம் செய்த சாதனை.. பட்டையைக் கிளப்பும் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

மார்க் ஆண்டனி திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா?

மார்க் ஆண்டனி

விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலரின்  நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15 -ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தை மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தை எஸ்.ஜே. சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழு முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் திரையரங்கில் வந்து கண்டு களித்தனர். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் விஷாலும் எஸ்.ஜே. சூர்யாவும் படத்தின் வரவேற்புக்கு அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளனர். 

பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்

இந்நிலையில், மார்க் ஆண்டனி படம் வெளியாகி 9 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை இந்திய அளவில் ரூ. 56.6 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது. பத்தாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் எனும் நிலையில், இப்படம் இந்திய அளவில் 5.4 கோடிகள் வசூல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹாலிவுட் திரைப்படங்களிலும், சில தமிழ் படங்களிலும் பார்த்த டைம் டிராவல் கதையை சற்று வித்தியாசமாக யோசித்து மார்க் ஆண்டனி திரைப்படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன்.

இந்தத் திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் இரட்டை வேடங்களில் அப்பா மகனாக நடித்திருக்கின்றனர். மார்க், ஆண்டனி, ஜாக்கிபாண்டியன், மதன் பாண்டியன் ஆகிய நான்கு கதாபாத்திரங்களை சுற்றியே இந்த கதை நடைபெறுகிறது. அதுவும் 1975 மற்றும் 1995 ஆகிய இரு காலகக்ட்டங்களில் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. 

இந்த வாரம் வேறு எந்த முக்கியமான படங்களும் வெளியாகாத நிலையில் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாக்ர் ஆண்டனி வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகின்றது. 

கண்டெண்ட் பிடித்தது

மார்க் ஆண்டனியின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஷால், “நான் ஆதிக்குடன் ஒரு படம் பண்ணுவதாக அறிவித்ததும், நிறைய பேர் அவர் கூட ஏன் படம் பண்றீங்கனுதான் கேட்டாங்க. எனக்கு கன்டென்ட் பிடிச்சிருக்கு. அந்த தம்பி மேலேயும் நம்பிக்கை இருக்கு, கரெக்டா பண்ணிடுவாருனு சென்னேன். ஆனால் என்னிடம் அப்படி கேட்டவர்களே இப்போது கால் செய்து படம் நன்றாக இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் நன்றாக இயக்கி இருக்கிறார் என்று கூறுகிறார்கள்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், மார்க் ஆண்டனி தனது கேரியரில் மிகப்பெரிய படம் என்றும், ஒரு மைல்கல் என்றும், 100 கோடி கிளப்பில் சேரப்போவதாகவும், இது தனது கேரியரில் 100 கோடி வசூல் செய்யும் முதல் படம் என்றும் விஷால் கூறினார்.

மேலும் படிக்க

Simbu New Look: 'சேகுவேரா கெட்டப்பில் சிலம்பரசன்’ .. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.. பின்னணி என்ன?

Asian Games Medal Tally: ஆசிய விளையாட்டு போட்டி - குறிவைத்து அடிக்கும் இந்தியா - பதக்கப் பட்டியலில் முதலிடம் யாருக்கு?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Embed widget