
Periods Pain : குளிர்காலத்தில் பீரியட்ஸ் வலி பாடாய்படுத்தி எடுக்குதா? என்ன காரணம்? எப்படி குறைப்பது?
சில நபர்களுக்கு இதனுடன் வாந்தி, குமட்டல், தலைவலி, செரிமான பிரச்சனைகள் மற்றும் இதர பல பிரச்னைகளும் இதன்மூலம் ஏற்படும்.

மாதவிடாய் காலத்தில், உங்கள் கீழ் முதுகு, தொடைகள் மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் வலி ஏற்படுவது இயல்பானது. உங்கள் கர்ப்பப்பையின் தசைகள் இறுக்கமடைந்து தளர்ச்சி அடைவதால் இது உண்டாகிறது.இதன் மூலம் தேவையற்ற சதைப் பகுதிகள் உடலில் இருந்து வெளியேற இது உதவுகிறது. இதனால் சதைப்பிடிப்புகள் எப்போதாவது ஏற்படலாம். இது உங்கள் தசைகள் சுறுசுறுப்பாக இருப்பதையும் குறிக்கிறது. சில நபர்களுக்கு இதனுடன் வாந்தி, குமட்டல், தலைவலி, செரிமான பிரச்சனைகள் மற்றும் இதர பல பிரச்னைகளும் இதன்மூலம் ஏற்படும்.
பெரும்பாலான உடல் உபாதைகளைப் போலவே, இதற்கும் தனியாக உடலை கவனித்துக் கொள்வதன் வழியாக இதுபோன்ற உபாதைகளைக் கட்டுப்படுத்த இது உதவும். தசைப்பிடிப்புகள் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும், இதனால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தலாம் அல்லது கணிசமாகக் குறைக்கலாம். குளிர்காலத்தில் இதுபோன்ற வலி ஏற்படும்போது அதனைக் கட்டுப்படுத்த உதவும் சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் சில உங்களுக்காக..
உங்களுக்கு வலியும், தசைப்பிடிப்பும் ஏற்பட்டால், இந்த குளிர் காலத்தில் உங்களுக்கு ஒரு நல்ல மசாஜ் தேவைப்படலாம். உங்களுக்கு நீங்களே மசாஜ் அல்லது வேறு யாரேனும் ஒருவர் உதவியுடன் மசாஜ் செய்வதன் மூலம் இடுப்பு தசைகள் தளர்த்தப்பட்டு வலி நீங்கும். இந்த மசாஜுக்கு தேங்காய் எண்ணெய், பாடி லோஷன் அல்லது மசாஜ் எண்ணெயை உங்கள் தோலில் தடவி மெதுவாக மசாஜ் செய்யலாம்.
ஒரு நல்ல மசாலா டீ தயாரித்துப் பருகுவது இதற்கான நல்ல தீர்வாக இருக்கலாம்... நீங்கள் நன்றாக துருவிய இஞ்சி, இலவங்கப்பட்டை தூள் , மிளகு மற்றும் இதர பிற மசாலாப் பொருட்களை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனுடன் டீத்தூள் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டவும். இதனைப் பருகுவது குளிர்காலத்திற்கு ஏற்றது.
தண்ணீர் - மாதவிடாய் நேரத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவும். சீரக தண்ணீர், வெந்தய தண்ணீர் என எது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். இது வழிகளை குறைத்து , தசை பிடிப்பு, மனக்குழப்பம் ஆகியவற்றை குறைக்கும். தண்ணீர் தான் முதல் உணவாக எடுத்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் வரும் சோர்வு நீங்கி, சாதாரணமாக வைக்க உதவும்.
இரும்பு சத்து அதிகம் இருக்கும் உணவுகள் - பேரீச்சம் பழம், அத்தி பழம், மாதுளை பழம், வெந்தய கீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. இது இரத்தப்போக்கினால் வரும் உடல் சோர்வில் இருந்து மீண்டு வர உதவும். இரத்த போக்கு அதிகமாக இருந்தால் உடல் சோர்வு, துவண்டு போதல், இரத்த போக்குடன் வரும் வலி என தொந்தரவாக இருக்கும். இதில் இருந்து மீண்டு வர இரும்புசத்து மிக்க உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்
காய்கள் - உணவில் பச்சை காய்களை சேர்த்து கொள்ளுங்கள். இது சோர்வு மற்றும் வலியில் இருந்து மீண்டு வர உதவியாக இருக்கும். வேகவைத்தோ, ஆவியில் சமைத்தோ காய்களை எடுத்து கொள்வது சிறந்த பலனளிக்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

