Female Condom | ஆணுறை தெரியும்.. பெண்ணுறை தெரியுமா? அதை எப்படி பயன்படுத்துவது?
யோனியின் வடிவம், பண்பு குறித்த அறிவு பலருக்கும் இல்லாதது பெண்ணுறை அதிகமாக பயன்படுத்தலில் இல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணம்.
ஆரோக்கியமான உடலுறவிற்கு முக்கியமான அடிப்படையாக இருப்பது ஆணுறை பயன்பாடு. கரு உருவாவதைத் தடுப்பதற்கு என்று கூறப்பட்டாலும் இதற்கு மற்றொரு அவசிய பயனும் இருக்கிறது – உடல் தொடர்பு மூலமாகப் பரவும் தொற்றுகளைத் தடுப்பதும் ஆணுறையின் பயனாகும். பலரும் இதனைத் தவிர்த்துவிட்டு உடலுறவில் ஈடுபடுவது தேவையற்ற கர்ப்பத்தை உண்டாக்குவது மட்டுமல்லாமல் ஆபத்தான தொற்றுகளையும் உருவாக்கும். அதனால்தான் காண்டம் அணிவது அவசியமாகிறது.
ஆணுறை பயன்பாடு, தேவை குறித்து தெரிந்த பலரும் அதை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நம்மில் பலருக்கு பெண்ணுறையைக் குறித்து தெரிவதில்லை. இந்த உறையும் நமது உடலைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. யோனியின் வடிவம், பண்பு குறித்த அறிவு பலருக்கும் இல்லாதது பெண்ணுறை அதிகமாக பயன்படுத்தலில் இல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணம். பெரிதளவில், ஆண்களின் குறியும், உடலுறவில் ஆண்களின் பங்கு குறித்து பூதாகரமான பிம்பம் ஒன்று வளர்ந்திருப்பதாலும் பெண்ணுறை பயன்பாடு குறித்து யாருக்கும் தெரிவதில்லை. பெண்ணுறையை எப்படி அணிவது என்று பார்க்கலாம்.
இந்த உறை ஒரு குழாய் போன்று இருக்கும், அதன் இரு முனைகளில் இரு வளையங்கள் இருக்கும். மாதவிடாய் காலங்களில் கப், டாம்பூன் போன்றவற்றை யோனிக்குள் பொருத்துவது போன்றுதான் இந்த உறையையும் உள்செலுத்த வேண்டும். உள் வளையத்தை உள்நுழைத்து கர்ப்பப்பை வாயின் வரை கொண்டு போக வேண்டும். அப்போது வெளி வளையம் யோனியின் முகப்பின் அருகே இருக்கும். இப்போது விந்து இந்த பையினுள் அடைந்து விடும். பயன்பாட்டின்பின், வெளி வளையத்தை நன்றாக சுற்றி ஒரு முடிச்சு போல் ஆக்கிவிட்டு இந்த பையை மெதுவாக வெளியே இழுக்க வேண்டும். ஆண் உறையைப் போல குறி விறைப்பாகுவதற்கு பெண்கள் காத்திருக்க தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் இந்த உறையை உள்செலுத்திக் கொள்ளலாம். முற்றிலும் பாதுகாப்பானது.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )