நோ டென்ஷன்! குழந்தைகளிடம் கோபத்தை காட்டாதீங்க! கோபம் வந்தா.. இப்படி ட்ரை பண்ணுங்க!
அந்த சமயத்தில் நீங்கள் அவர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்ளலாம் அல்லது அடிக்கவும் முற்படலாம் . அது தவறு!
சிறு வயதில் நமக்கு வித விதமாக அடிவாங்கிய பழக்கம் இருக்கும் . சிலர் வீட்டை சுற்றி சுற்றி வந்து பிரம்பால் அடி வாங்கியிருப்பார்கள். இப்படியான அடிகள் நாம் விவரம் தெரியாத வயதில் வாங்கியிருந்தாலும் கூட , இன்றைக்கும் நம் நினைவில் நீங்காமல்தானே இருக்கிறது. அது அம்மாவின் உச்சபட்ச கோவத்தின் வெளிப்பாடாகத்தானே இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் பலரும் குழந்தை வளர்ப்பை பக்குவமாக கையாளுகின்றனர். இக்கால குழந்தைகள் மிகவும் சென்சிடிவானர்கள் . அவர்களை அன்பால் மட்டுமே கையாளவேண்டும் . மாறாக ஆயுதங்களை எடுத்தால் அவர்கள் சற்று வித்தியாசமாக பயணிக்கவோ அல்லது உளவியல் சிக்கலையோ சந்திக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள் . ஆனாலும் ஒரு சில சமயங்களில் குழந்தைகள் செய்யும் தவறுகள் உச்சபட்ச கோவத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. சில நேரங்களில் டீனேஜர்களிடமும் இதே பிரச்சனைகள்தான் . அந்த சமயத்தில் நீங்கள் அவர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்ளலாம் அல்லது அடிக்கவும் முற்படலாம் . அது தவறு! உங்கள் உணர்ச்சியை கட்டுப்படுத்த பழகிக்கொள்ளுங்கள். அப்படியானவர்களுக்காக கோபத்தை கட்டுப்படுத்த சில டிப்ஸுகளை பார்க்கலாம்.
கோவம் வரும் பொழுது உங்கள் குழந்தை / டீனேஜருக்கும் இடையில் ஒரு இடைவெளியை உடனடியாக கடைபிடியுங்கள். இல்லையென்றால் அவர்கள் மீது நீங்கள் வன்முறையோடு நடந்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் வேறு ஒரு அறையோ அல்லது பகுதியோ இருந்தால் , கோபம் வரும் சமயத்தில் அங்கு சென்று விடுங்கள். அல்லது குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்துக்கொண்டு சற்று ரெஃப்ரஷ் செய்துக்கொள்ளுங்கள். பின்னர் ஒரு சோஃபாவில் அமர்ந்து உங்களது எண்ணத்தையும் முடிவையும் மறுபரிசீலனை செய்துப்பாருங்கள்.
சில நேரங்களில் குழந்தைகளின் கோபத்தை குறைக்க நாம் மூச்சு பயிற்சியை கற்றுக்கொடுத்திருப்போம். அதே போல நீங்கள் நிதானத்தை கடைப்பிடிக்க உடனடி மூச்சு பயிற்சியை கடைபிடிக்கலாம்.
ஒவ்வொரு முறை கோபப்படும் பொழுதும் நீங்கள் ஒரு விஷயத்தை மறந்து விடாதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் எப்படி பொறுப்புடன் கையாளுகிறீர்களோ அப்படித்தான் உங்கள் குழந்தைகளும் அவர்கள் கோபப்படும் தருணத்தில் கடைப்பிடிப்பார்கள். அதனை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் கோபப்படும் தருணத்தில் இதனை நினைவில் கொள்ளுங்கள்
1. தற்போது இப்படியாக அஞ்சுவதற்கான நெருக்கடியான சூழல் இல்லை.
2. குழந்தைகள் தங்களின் தேவைக்காக உங்களை நாடும் பொழுது அடம்பிடிப்பார்கள்.
3.அன்பிற்கும் ஆதரவிற்கும் குழந்தைகள் தகுதி உடையவர்கள்
4. அவர்கள் உங்களை மனமார , உளமார நேசிக்கிறார்கள்
மேற்கண்டவற்றை ஒவ்வொரு முறை கோவம் வரும் பொழுதும் நினைவு கூர்ந்து பார்க்க தவறிவிடாதீர்கள்.