சரியான ப்ராவை (Bra) எப்படித் தேர்ந்தெடுப்பது? இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுங்க.. இதைப் படிங்க முதல்ல..
ஒவ்வொரு ஆடைகளுக்கு ஒவ்வொரு வகையான ப்ராக்கள் உள்ள நிலையில், எது நமக்கு ஏற்றது என்பது அறிந்துக்கொண்டு பயன்படுத்த தொடங்க வேண்டும்.
பெண்கள் தங்கள் உடல் அமைப்பு மற்றும் மார்பகங்களைப் பாதுகாக்கும் வகையில் ப்ராக்களைப் பயன்படுத்துகின்றனர். தற்போது டீனேஜ் ப்ரா, எவ்ரிட் ப்ரா, டி- சர்ட் ப்ரா, புஷ் அப் பரா என பல வகைகள் உள்ளது.
பெண்கள் தங்களது உடைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்று. அதிலும் பருவமடைந்த காலம் முதல் பெண்கள் தங்களது உடல் அமைப்பு மற்றும் மார்ப்பகங்களை முறையாக பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மட்டுமே எதிர்காலத்தில் நாம் விரும்பிய உடைகளை அணிய வேண்டும். ஆனால் இந்த விஷயங்களை நாம் முறையாக கடைப்பிடிப்பதே இல்லை.
ஏதோ ப்ரா போட வேண்டும் என்பதற்காக பெண்கள் கிடைத்ததை விரும்பி அணிகின்றனர். டீன் ஏஜ் வயதில் இருந்து பயன்படுத்தி வந்தாலும் பல பெண்கள் தற்போது வரை மார்பகத்தின் அளவுக்கேற்ப ப்ராக்களை வாங்குவதில்லை. இவ்வாறு உபயோகிக்கும் போது உடல் அமைப்பு மாறுவதோடு, தேவையற்ற பிரச்சனை நாம் சந்திக்க நேரிடும்.
எனவே ப்ராக்களை சரியாக எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதை நாம் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். இதோடு மட்டுமின்றி லைட் நிற ஆடைகளுக்கு லைட் நிறத்திலும், டார்க் நிற ஆடைகளுக்கு டார்க் நிறத்திலும் ப்ராக்களை தேர்வு செய்ய வேண்டும். மேலும் முன்பிருந்தே சரியான அளவில் பிராரக்களை பயன்படுத்தாமல் இருந்தால் மார்பகங்கள் தளர்வு ஏற்படும். இவ்வாறு இருப்பவர்களுக்கு அன்டர்வர்டு ப்ரா பயன்படுத்தப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு ஆடைகள் மற்றும் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு பல்வேறு ப்ராக்கள் உள்ள நிலையில் அவை என்னென்ன வகைகள் மற்றும் யாருக்கு எது உகந்தது? என இங்கே விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
பெண்களுக்கு ஏற்ற ப்ராக்களின் வகைகள்:
டீனேஜ் ப்ரா:
பருவமடைந்த பிறகு உடல் அமைப்பில் எவ்வித மாற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என முதல் முறையாக ப்ரா பயன்படுத்தும் பெண்கள் டீன் ஏஜ் ப்ராவைப் பயன்படுத்தலாம். இதனால் நீங்கள் புதிதாக பயன்படுத்துகிறோம் என் அசவுகரியம் இல்லாமல் இருக்கலாம்.
டி-ஷர்ட் ப்ரா :
இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் மெல்லிய டாப்ஸ் மற்றும் டி-ஷர்ட்களை பயன்படுத்துகின்றனர். இதுப்போன்ற உடைகளை நீங்கள் அணிகிறீர்கள் என்றால் டி- சர்ட் ப்ராவை நீங்கள் தேர்வு செய்யலாம்.
எவ்ரிடே பிரா :
குறைந்த எடை மற்றுமு் மார்பகத்தை எளிதாக பராமரிக்க இந்த ப்ராவை பயன்படுத்தலாலம். மேலும் தினசரி ஆடைகளுக்கு இந்த எவ்ரிடே ப்ரா உகந்ததாக உள்ளது.
புஷ் அப் பிரா :
புஷ் அப் பிரா என்பது தளர்ந்த மார்பகத்தைத் தாங்கி பிடிக்கவும், எடுப்பாக மார்பகத்தைக் காட்டவும் இது உபயோகமாகவுள்ளது.
நர்சிங் பிரா :
பாலூட்டும் தாய்மார்களுக்காவே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டது நர்சிங் ப்ரா. இந்த ப்ராவில் முன்பகுதியில் இருபுறமும் பட்டன்கள் இருப்பதால், குழந்தைகளுக்கு பாலூட்ட வசதியாக உள்ளது. இன்றைக்கு பல தாய்மார்கள் பயன்படுத்திவருகின்றனர்.
ஃபிரன்ட் ஓப்பன் பிரா :
ப்ராவினை அணியும் போது பின்பகுதியில் ஊக்குபோட மிகவும் சிரமப்படுபவர்கள்.எனவே ப்ராவில் முன்பகுதியில் ஊக்கு இருக்கும்படியான ஃபிரண்ட் ஓப்பன் ப்ராவை நீங்கள் பயன்படுத்தலாம்.
மேலும் லோ நெக் டாப்ஸ் மற்றும் டி- சர்ட்டுகளை அணியும் போது கேஜ் ப்ராவை நீங்கள் பயன்படுத்தலாம். இதுப்போன்று ஒவ்வொரு ஆடைகளுக்கு ஒவ்வொரு வகையான ப்ராக்கள் உள்ள நிலையில், எது நமக்கு ஏற்றது என்பது அறிந்துக்கொண்டு பயன்படுத்த தொடங்கவேண்டும்.