Bread Cheese Bite :மழைக்கு இதமா ஒரு ஈசி ஸ்நாக்.. பிரெட் சீஸ் ரெசிபி...செய்முறை இதோ...
பிரெட்டை வைத்து மழைக்கு இதமான சூடான ஒரு சூப்பர் சிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மழை பெய்யும் நேரத்தில் நாம் எல்லோரும் பொதுவாக ஆசைப்படும் ஒரு விஷயம் என்னெவென்றால் சூடான ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்பது தான். சில்லென்ற வானிலையில் சூடான ஸ்நாக்ஸை சாப்பிடுவது வாய்க்கு இதமாக இருக்கும். நீங்கள் வீட்டில் குறைந்த நேரத்தில் ஏதேனும் சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் இந்த பெரெட் சீஸ் பைட்ஸ் -ஐ முயற்சி செய்து பாருங்கள். குறைந்த பொருட்களை கொண்டு நிறைவான ஒரு ஸ்நாக்ஸை உங்களால் செய்து விட முடியும். இந்த ரெசிபியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிரட் - 4
பிரெட் க்ரம்ஸ் - 1/2 கப்
சீஸ் துருவல் -5 ஸ்பூன்
கார்ன் பிளார்-3 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரெட் துண்டின் நான்கு ஓரங்களையும் நீக்கி விட வேண்டும். பின் பிரெட் துண்டுகளை முக்கோண வடிவமாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு பிரெட் துண்டில் 2 முக்கோண வடிவங்கள் கிடைக்கும்.
சீஸை ஒரு தட்டில் துருவி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தட்டில் அல்லது பௌலில் பிரெட் க்ரம்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் சோள மாவு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். ( பிரெட்டை இதில் டிப் செய்து எடுக்க தேவையான அளவில் மாவை கரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு முக்கோண வடிவ துண்டின் மீது, துருவி வைத்துள்ள சீஸை தூவி விட்டு பின் அதன் மேல் மற்றொரு முக்கோண வடிவ பிரெட் துண்டை வைக்க வேண்டும்.
இப்போது சீஸ் வைத்து நிரம்பியுள்ள பிரெட் துண்டினை கார்ன் பிளார் கரைசலில் டிப் செய்து, பின் பிரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போன்று அனைத்து பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் காய்ந்த பின் தயாரித்து வைத்துள்ள பிரெட்டை எண்ணெயில் சேர்க்க வேண்டும். தீயினை சிம்மில் வைத்து ப்ரெட்டின் இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான பிரெட் சீஸ் பைட்ஸ் தயார்.
மேலும் படிக்க
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் சோதனை.. களமிறங்கிய வருமான வரித்துறையினர்..!