மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

கம்மியான கார்ப்ஸ்.. அதிகமான ப்ரோட்டீன்.. தென் கொரிய மக்களின் உணவுமுறையில் இவ்ளோ மேஜிக்கா?

தென் கொரிய மக்கள் அரிசி உட்கொள்வது குறைந்துள்ளதாக ஆய்வில் தகவல்

உலகம் முழுவதும் உடல் எடை அதிகரிக்கும் நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் வரும் வேளையில், தென்கொரியாவில் நிலமை இதற்கு நேர்மாறாக உள்ளது.  தென் கொரியாவில் உள்ள மக்களின் டயட் முறை மாறியுள்ளதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வு ஒன்றில் தென் கொரிய மக்களின் உணவு பழக்கம் மாறிவிட்டது என்றும் அவர்களின் டயட்டில் கார்போஹைட்ரேட் எடுத்து கொள்வது குறைந்துவிட்டதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

’The Korea National Health and Nutrition Examination’ -இன் தகவலின்படி, கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகமையால் வெளியிடப்பட்ட கொரிய தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆய்வில், 2021 ஆம் ஆண்டில் கொரியர்களின் ஒரு நாளைக்கான சராசரி ஆற்றல் உட்கொள்ளல் ஆண்களுக்கு 2,129 கலோரி மற்றும் பெண்களுக்கு 1,576 கலோரி என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்ந்து ஆறாவது ஆண்டாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரிய நாட்டு மக்களிடையே கார்போ-ஹைட்ரேட் நுகர்வு குறைந்து வருகிறது. கார்போஹைட்ரேட் ஆற்றல் நுகர்வு சதவீதம் 2012 இல் 64.9 சதவீதத்திலிருந்து 2021 இல் 59.4 சதவீதமாக குறைந்துள்ளது.  மறுபுறம், மொத்த கலோரிகளின் சதவீதமாக உட்கொள்ளப்படும் கொழுப்பின் அளவு 20.4 சதவீதத்திலிருந்து 24.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. சராசரி ஆண்களின் ஆற்றல் உட்கொள்ளலில் 16.4 சதவீதமும், சராசரி பெண்களின் உட்கொள்ளலில் 15.5 சதவீதமும் புரோட்டீன் உள்ளது.

புள்ளிவிவரங்கள் குறைந்த கார்ப், அதிக கொழுப்புள்ள உணவை மக்கள் தங்கள் டயட் லிட்டில் பின்பற்றுவதாக பிரதிபலிப்பகறது.  இது சமீபத்திய ஆண்டுகளில் எடையைக் குறைக்க அல்லது சிறந்த வாழ்க்கை முறையைத் தேடும் நோக்கத்தில் மக்களிடையே பிரபலமாகிவிட்டதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது.  2012 மற்றும் 2021 ஆண்டுக்கு இடையில், ஒரு நபருக்கு சராசரியாக தினசரி உட்கொள்ளும் தானியங்கள் 299.1 கிராமிலிருந்து 265.9 கிராமாக குறைந்துள்ளது, அதே சமயம் தினசரி உட்கொள்ளும் இறைச்சி நுகர்வு 113.9 கிராமிலிருந்து 123.8 கிராமாக உயர்ந்துள்ளதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கொரிய மக்கள் தங்கள் உணவுகளில் அரிசி உட்கொள்ளல் ஏன் குறைந்துள்ளது என்பதை தரவு காட்டுகிறது. கொரியாவில் சராசரியாக உட்கொள்ளும் அரிசியின் அளவு சமீபகாலமாக குறைந்து வருகிறது.

சமீபத்திய ஆய்வுகளின் படி,  தென் கொரிய மக்கள் கடந்த ஆண்டு சராசரியாக  56.9 கிலோ அரிசியை டயட்டில் சேர்த்திருந்ததாக தெரிவிக்கின்றன.  இது முந்தைய ஆண்டு நுகர்வுவான 57.7 கிலோவை விட 0.8 கிலோ குறைவாக உள்ளது. 1970 ஆம் ஆண்டில் இருந்து , ஒரு நபர் சராசரியாக 136.5 கிலோ அரிசி தங்கள் உணவில் சேர்த்துள்ளனர். ஆனால், இது தற்போதைய கால கட்டத்தில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் நுகர்வு முறையே 38.7 கிராம் மற்றும் 56.3 கிராம் குறைந்துள்ளது. கொ

2020 ஆம் ஆண்டின் படி, கொரியர்களின் டயட்டில்  கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து உட்கொள்ளும் ஆற்றல் சதவீதம் 55 முதல் 65 சதவீதம் வரையிலும், புரோட்டீன்  7 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையிலும், கொழுப்பு 15 முதல் 30 சதவீதம் வரையிலும் இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் சுகாதார மற்றும் நல அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. 

தேசிய சுகாதார மேம்பாட்டுச் சட்டத்தின் அடிப்படையில், கொரியர்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மதிப்பிடுவதற்காக ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஒரு வயதுக்கு மேற்பட்ட வயதுடைய 10,000 பேரின் மாதிரி அளவுகளின் அடிப்படையில் இது நடத்தப்படுகிறது. மக்கள் கணக்கெடுப்புக்கு முந்தைய நாள் அவர்கள் உட்கொண்ட உணவின் அளவு மற்றும் பல்வேறு வகைகளை நினைவுபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை
பயங்கரம்! பெண் போலீசை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் - தடுக்க வந்த மாமனாருக்கும் வெட்டு
பயங்கரம்! பெண் போலீசை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் - தடுக்க வந்த மாமனாருக்கும் வெட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை
பயங்கரம்! பெண் போலீசை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் - தடுக்க வந்த மாமனாருக்கும் வெட்டு
பயங்கரம்! பெண் போலீசை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் - தடுக்க வந்த மாமனாருக்கும் வெட்டு
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
Royal Enfield Scram 440: வந்தாச்சு ராயல் என்ஃபீல்டின் ஸ்க்ராம் 440 - பழசுக்கு புதுசு, என்னவெல்லாம் கொடுத்து இருக்காங்க?
Royal Enfield Scram 440: வந்தாச்சு ராயல் என்ஃபீல்டின் ஸ்க்ராம் 440 - பழசுக்கு புதுசு, என்னவெல்லாம் கொடுத்து இருக்காங்க?
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
Embed widget