Sindhi Fish Curry :அசத்தலான சுவையில் மீன் குழம்பு...சிந்தி மீன் குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்...
வித்தியாசமான மற்றும் அசத்தலான சுவையில் சிந்தி மீன் குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
சிந்தி மீன் குழம்பு
சிந்தி மீன் குழம்பு மிகவும் பிரபலமானது மற்றும் எளிதானது. இந்த சுவையான மீன் குழம்பு பூண்டு, தக்காளி மற்றும் சில மசாலாப் பொருட்களின் தனித்துவமான சுவையுடன் தயாரிக்கப்படுகிறது. வழக்கமாக நாம் செய்யும் மீன் குழம்புகளில் இருந்து இது சற்று மாறுபட்டது. இதன் தயாரிப்பு முறையும் சுவையும் தனித்துவமாகவும், டேஸ்டியாகவும் இருக்கும். இதை சூடான சாதத்துடன் சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். வாங்க சிந்தி மீன் குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ராஜா மீன் (king fish) 6-7 துண்டுகள், 4 பச்சை மிளகாய், பூண்டு, கிராம்பு நறுக்கியது-3-4 , 2 தக்காளி நறுக்கியது, 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1/2 தேக்கரண்டி ஹல்டி(haldi) 3 தேக்கரண்டி எண்ணெய், தண்ணீர்- தேவைக்கேற்ப, 1 கப் கொத்தமல்லி இலைகள், உப்பு- சுவைக்கேற்ப.
செய்முறை
1.மீனை நன்றாக சுத்தப்படுத்தி எடுத்து அதன் மேல் உப்பு, சிவப்பு மிளகாய் தூள், ஹல்டி(haldi) மற்றும் எண்ணெய் ஆகியவற்றை தூவவும். இந்த கலவை மீனின் மீது நன்றாக படும்படி பூச வேண்டும். இப்போது மீனை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
2.இதற்கிடையில், ஒரு மிக்ஸியில் கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு கிராம்பு ஆகியவற்றை சேர்த்து, மென்மையாக பேஸ்ட் பக்குவத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
3.கடாயில் மீனை வறுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும், மசாலா தடவி ஊற வைத்த மீன் துண்டுகளை வறுத்தெடுக்க வேண்டும்.
4.மற்றொரு கடாயில், தயார் செய்த கொத்தமல்லி விழுது மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து எண்ணெய் சேர்க்கவும். இவற்றை நன்றாக கலந்து சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
5.அடுத்து, கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் நறுக்கிய தக்காளியை இதில் சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். குழம்பு ஒரு கொதி வரும் வரை வேக வைக்க வேண்டும்.
6. வறுத்த மீன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் அடுக்கி வைத்து அதன் மீது குழம்பை ஊற்ற வேண்டும். இதனை கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து சூடாக பரிமாறலாம். சூடான சாதத்துடன் சாப்பிட சிந்தி மீன் குழம்பு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
மேலும் படிக்க