AFG Vs PAK, Innings Highlights: இறுதியில் அதிரடிகாட்டிய பாகிஸ்தான்; ஆஃப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இலக்கு
PAK vs AFG Innings Highlights: ஃபார்ம் அவுட்டில் உள்ளார் என கூறப்படும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்த தொடரில் மட்டும் இரண்டாவது அரைசதத்தினை விளாசினார்.
![AFG Vs PAK, Innings Highlights: இறுதியில் அதிரடிகாட்டிய பாகிஸ்தான்; ஆஃப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இலக்கு ODI World Cup 2023 Pakistan give target 283 runs against Afghanistan Innings highlights MA Chidambaram Stadium AFG Vs PAK, Innings Highlights: இறுதியில் அதிரடிகாட்டிய பாகிஸ்தான்; ஆஃப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இலக்கு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/23/9de1b562fd02951b2bf7da8a8458e9461698061745106102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. குறிப்பாக மிகவும் பலமான மற்றும் அரையிறுதிக்கு கட்டாயம் முன்னேறும் அணிகள் என கணிக்கப்பட்ட அணிகளில் ஒரு சில அணிகள் மிகவும் மோசமான நிலையில் தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. இந்த தொடரில் புள்ளிகள் மட்டும் இல்லாமல், ரன்ரேட்டும் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பினை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும் என்பதால், அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட உயிரைக் கொடுத்து விளையாடு வருகின்றன.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படும் என்பதால் ஆஃப்கானிஸ்தான் தரப்பில் மொத்தம் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் களம் இறக்கப்பட்டனர்.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி மிகவும் நிதானமாகவே விளையாடியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல்-ஹக் மற்றும் அப்துல்லா கூட்டணி அருமையாக பவுண்டரிகளை விரட்டி வந்தது. பவர்ப்ளேவில் பாகிஸ்தான் தரப்பில் இந்த தொடரில் இன்றைய போட்டியில்தான் சிக்ஸரே விளாசப்பட்டது. தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. இமாம் உல்-ஹக் தனது விக்கெட்டினை 17 ரன்களுக்கு இழந்த பின்னர் வந்த கேப்டன் பாபர் அசாம் மைதானத்தின் சூழலை புரிந்து கொள்ள நேரம் எடுத்துக் கொண்டார். இதற்கிடையில் தொடக்க ஆட்டக்கார்ர் அப்துல்லா, இந்த தொடரின் மிகவும் இளம் வீரரான நூர் அகமது பந்தில் எல்.பி.டபள்யூ முறையில் அரைசதம் கடந்த பின்னர் வெளியேறினார்.
இதன் பின்னர் வந்த அதிரடி ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் களமிங்கி 10 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் உட்பட 8 ரன்கள் சேர்த்து தேவையில்லாத ஷாட் ஆடி தனது விக்கெட்டினை நூர் முகமது பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் பாபர் அசாம் 69 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டினார். ஃபார்ம் அவுட்டில் உள்ளார் என கூறப்படும் பாபர் அசாம் இந்த தொடரில் விளாசும் இரண்டாவது அரைசதம் இதுவாகும். அதன் பின்னர் வந்த சவுத் தனது விக்கெட்டினை நபி பந்தில் இழந்து வெளியேறினார்.
நிதானமாக விளையாடி வந்த கேப்டன் பாபர் அசாம் நூர் அகமது வீசிய போட்டியின் 42வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி, 5வது பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 92 பந்தில் 74 ரன்கள் விளாசி இருந்தார். இந்த போட்டியில் பாகிஸ்தான் தரப்பில் அதிக ரன்கள் சேர்த்தவரும் இவர்தான்.
பாபர் அசாம் விக்கெட்டுக்குப் பின்னர் பாகிஸ்தான் அணி தரப்பில் அதிரடியாக ரன்கள் குவிக்க திட்டமிட்டு விளையாடியது. இதனால் அணியின் ஸ்கோர் சவாலான இழக்க நிர்ணயிக்க உதவியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் நூர் முகமது 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அதேபோல், மிகவும் எதிர்பார்க்கப்பாட்ட ரஷித் கான் 10 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் கைப்பற்றப்பில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)