Peri Peri Pasta: பாஸ்தா க்ரேவிங்கா? பெரி பெரி பாஸ்தா ட்ரை பண்ணுங்க - ரெசிபி இதோ!
Peri Peri Pasta:பெரி பெரி பாஸ்தா செய்முறை பற்றிய விவரங்களை காணலாம்.
பாஸ்தா விரும்பி பிடிக்கும் எனில் பெரி பெரி பாஸ்தா வீட்டிலேயே ருசியாக செய்யலாம்.
என்ன தேவை?
சிவப்பு, மஞ்சள், பச்சை குடைமிளகாய் - தலா ஒன்று
சீஸ் - 2 டீ ஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஃரெஷ் க்ரீம் - ஒரு கப்
சில்லி ஃப்ளேக்ஸ் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஓரிகானோ - 1/2 டீஸ்பூன்
பெரி பெரி மசாலா - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - 1
பென்னே பாஸ்தா - ஒரு கப்
மைதா - 1 டீஸ்பூன்
பால் - அரை கப்
செய்முறை:
காய்கறி, சாஸ் உள்ளிட்டவற்றை தனி தனியே தயாரிக்க வேண்டும். முதலில் பென்னெ பாஸ்தாவை நன்றாக வேக வைத்து எடுக்கவும். பாஸ்தா குழைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும். கடாய் சூடானதும் அதில் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற குடைமிளகாய் உள்ளிட்டவற்றை நன்றாக வதக்கவும். இதோடு மிக்ஸ்டு ஹேர்ப்ஸ், ஓரிகானோ சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து, சாஸ் தயாரிப்பு - கடாய் சூடானதும் அதில் வெண்ணெய், மைதா மாவு சேர்த்து வறுத்து, அதோடு பால் அரை கப் சேர்க்கவும். நன்றாக கொதிக்கும் நிலையில், சீஸ், பெரி பெரி மசாலா சேர்க்கவும். நன்றாக கலந்துவிடவும். அடுத்து வேக வைத்த குடைமிளகாய், பாஸ்தா சேர்த்து கிளறி தேவையெனில் சீஸ் ஸ்லைஸ் சேர்க்கலாம். பெரி பெரி பாஸ்தா ரெடி.
மேக்ரொனி பாஸ்தா
செய்முறை
மேக்ரொனி வகை பாஸ்தாவை வேக வைத்து எடுக்கவும். இதற்கு தேவையான பூண்டு, வெங்காயம், சிகப்பு குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய் எல்லாவற்றையும் நன்றாக நறுக்கவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கவும். தக்காளி நீளமாக நறுக்கவும். பச்சை மிளகாய் சேர்க்கவும். கடாய் ஒன்றில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம்., தக்காளி, நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவுன். எல்லாம் நன்றாக வதங்கியதும். மேக்ரோனி பாஸ்தாவையுன் இதோடு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். இந்து இந்தியன் ஸ்டைல் பாஸ்தா. சுவை வித்தியாசமாக இருக்கும். இறுதியில் சீஸ் ஸ்லைஸ் சேர்க்கவும்.
அடிக்கடி பாஸ்தா சாப்பிட வேண்டாமே
பெரும்பாலும் பாஸ்தா மைதா மாவில்தான் தயாரிக்கப்படுவதால் அது ரொம்பவே ஆரோக்கியமான உணவு என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில். மைதா என்பது நன்கு சுத்திகரிக்கப்பட்டு சத்துக்கள் நீக்கப்பட்ட உணவு; அதில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் இல்லை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். கோதுமை, மக்காச்சோளம், சிவப்பு அரிசி ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பாஸ்தாவில் செய்யப்படும் உணவுகளையும் அடிக்கடி சாப்பிடாமல் அளவோடு சாப்பிடுவது நல்லது. இதோடு காய்கறி, இறைச்சி, முட்டை, காளான் என சேர்த்து சாப்பிடுவதும் கொஞ்சம் நல்லது. எப்போதாவது சாப்பிடுவது நல்லது. ருசியாக இருக்கிறது என அடிக்கடி சாப்பிடுவது உடல்நலனுக்கு நல்லது இல்லை என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆர்கானிக் பாஸ்தா வகைகள் கிடைக்கும். அவற்றையும் அளவோடு பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார்கள்.
இட்லியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு அடி ஆழமான கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அதில் கொஞ்சம் சீரகம் சேர்க்கவும். அது பொரிந்ததும் காய்கறி சேர்க்கவும். பின்னர் அதனை நன்றாக வதக்கவும். பின்னர் வெங்காயம் தக்காளி குடை மிளகாய் உப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாடை போன பின்னர் சிறு துண்டுகளாக வெட்டிய பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், வினிகர், பாஸ்தா சாஸ், சோய் சாஸ் ஆகியனவற்றை சேர்க்கவும்.மேலும் வாசிக்க..