மேலும் அறிய
Nizami Fish Fry: மழை காலத்தில் சூப்பர் ஸ்டார்டர்ஸ் சாப்பிடனுமா... நிஜாமி மீன் வறுவல் செய்து அசத்தலாம்..!
வழக்கமான பாணியில் இல்லாமல் பச்சை நிறத்தில் சுவையாக மீன் சாப்பிட விரும்புவோர் ஒருமுறை இந்த ரெசிபியை செய்து பார்க்கலாம்.
![Nizami Fish Fry: மழை காலத்தில் சூப்பர் ஸ்டார்டர்ஸ் சாப்பிடனுமா... நிஜாமி மீன் வறுவல் செய்து அசத்தலாம்..! Nizami Fish Fry recipe and cooking tips fish lemon mint onion healthy food Nizami Fish Fry: மழை காலத்தில் சூப்பர் ஸ்டார்டர்ஸ் சாப்பிடனுமா... நிஜாமி மீன் வறுவல் செய்து அசத்தலாம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/a2c4b0ad4ca996963a429e67c9f7ffc61700492768318102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நிஜாமி மீன் வறுவல்
Nizami Fish Fry: எப்பொழுதும் சிக்கன் சாப்பிட்டு அலுத்து போனவர்கள் வித்யாசமான ஸ்டார்டர்ஸ் செய்து சாப்பிட விரும்பினால் நிஜாமி மீன் வறுவலை செய்து அசத்தலாம். வழக்கமான பாணியில் இல்லாமல் பச்சை நிறத்தில் சுவையாக மீன் சாப்பிட விரும்புவோர் ஒருமுறை இந்த ரெசிபியை செய்து பார்க்கலாம்.
நிஜாமி மீன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
வஞ்சிரம் மீன், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு, சீரகம், எலுமிச்சை- 1, கார்ன் ஃபிளோர் - ஒரு கப், வெங்காயம், உப்பு - தேவையான அளவு, எண்ணெய்- தேவையான அளவு.
நிஜாமி மீன் வறுவல் செய்யும் முறை:
முதலில் வஞ்சிரம் மீனை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர், மிக்சி ஜாரில் 6.7 பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, 5 பச்சை மிளகாய், ஒருப்பிடி புதினா, ஒருப்பிடி கொத்தமல்லி, ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர், அந்த கலவையில் கார்ன் ஃப்ளோர் மாவு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர், அரைத்து எடுத்த மசாலாவை சுத்தமாக கழிவி வைத்துள்ள மீனில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். மீன் மசாலாவில் ஊறியதும், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் வறுப்பதற்கு ஏற்றார் போல் எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் சூடானது, மசாலாவில் ஊறிய மீனை தோசைக்கல்லில் வைத்து இருபுறமும் திருப்பிவிட்டு எடுத்து கொள்ள வேண்டும்.
![Nizami Fish Fry: மழை காலத்தில் சூப்பர் ஸ்டார்டர்ஸ் சாப்பிடனுமா... நிஜாமி மீன் வறுவல் செய்து அசத்தலாம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/9842b251ade01ea84b8f925b96ee08be1700493118999102_original.jpg)
தற்பொது ரெடியான நிஜாமி மீன் வறுவலை வைத்து, அதன் மீது வெங்காயத்தை வெட்டிப்போட்டு கொடுத்தால் சூப்பர் ஸ்டாடர்ஸ் ரெடி. இந்த நிஜாமி மீன் வறுவலை சூடான சாப்பாட்டிற்கு சைடிஷாக வைத்து சாப்பிடலாம். சாம்பார் சாப்பாட்டிற்கு செம காம்பினேஷனாக இருக்கும்.
மேலும் படிக்க: Hydrabadi Green Chicken: சப்பாத்திக்கு சூப்பர் சைடிஷான ஹைதராபாத் கிரீன் சிக்கன் ரெசிபி..! செய்வது எப்படி?
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
தமிழ்நாடு
கிரிக்கெட்
தேர்தல் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion