மேலும் அறிய

முதல்வர் ஸ்டாலின் சூளுரை: பெரியார் மண்ணில் வெற்றி: எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி

CM Stalin ON Erode East By Election Result: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட்டை இழந்துள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது மூலம், மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என்றும் திமுக கூட்டணி வேட்பாளர் வி.சி. சந்திரகுமார், ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியை அளித்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஈரோடு தேர்தல்: திமுக வெற்றி:

ஈரோடு கிழக்குத் இடைத்தேர்தலில், காங்கிரசு போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக போட்டியிட்டது. திமுக சார்பாக சந்திரகுமார் போட்டியிட்டார். 

ஆனால், எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர் சீதாலட்சுமி போட்டியிட்டார்.

இங்கு தேர்தலானது , கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றது. இங்கு காலை முதலே திமுக வேட்பாளரே முன்னிலை வகித்து வந்தார். 17 சுற்றுகள் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், அதற்கான முடிவுகள் வெளியாகியன.

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1, 15,790 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்றுள்ளார். இந்நிலையில், 90,629 வாக்குகள் வித்தியாசத்தில்  திமுக வெற்றி பெற்றுள்ளது. அதே தருணத்தில் 1,967 வாக்குகள் வித்தியாசத்தில் டெபாசிட்டை இழந்துள்ளார். நோட்டாவில் 6109 வாக்குகள் பதிவாகியுள்ளன.

Also Read: NTK Lose Deposit: ஈரோடு தேர்தலில் டெபாசிட்டை இழந்த நாம் தமிழர்: டெபாசிட் என்றால் என்ன?

”பெரியார் மண்ணில் பெருவெற்றி”

முதலமைச்சர் ஸ்டாலி  தெரிவித்திருப்பதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட வெற்றி வேட்பாளர் வி.சி. சந்திரகுமார், ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையின் இலக்கணமாகச் செயல்பட்டு, கழகத்தின் வெற்றிக்காக உழைத்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கும் தோழமைக் கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தோழமைக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் ஆற்றிய பணியை மறக்க முடியாது. பல்வேறு சமூக அமைப்புகள், கட்சிகள் தி.மு.க.வின் வெற்றிக்காகப் பணியாற்றினார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும், மக்கள் ஆதரவுடன் 2021-ஆம் ஆண்டு அமைந்த இந்த ஆட்சிக்கும், நாம் செயல்படுத்தி வரும் உன்னதமான திட்டங்களுக்கும் மக்கள் அளித்துள்ள மாபெரும் அங்கீகாரம்தான் இந்த வெற்றி! தேர்தலுக்கு முன்னதாகவே வெற்றி யாருக்கு என்பதை உணர்ந்து விட்ட எதிர்க்கட்சிகள், களத்துக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடிய காட்சியையும் முன்கூட்டியே தமிழ்நாடு பார்த்து விட்டது.

2019 முதல் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டமன்றப் பொதுத் தேர்தல், உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் ஆகிய அனைத்திலும் தி.மு.க. கூட்டணியானது தொடர் வெற்றியைப் பெற்று வந்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. படுதோல்வியை அடைவதும் தொடர்கதையாக அமைந்தது. எனவே தேர்தல் களத்துக்கே வராமல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பங்கெடுக்காமல் தலைமறைவானது அ.தி.மு.க. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்குப் பாடம் புகட்ட மக்கள் தயாரான நிலையில் இங்கும் பதுங்கிவிட்டது.  தொடர் தோல்விகளால் ஏற்பட்ட சோர்வும், தேர்தல்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாமலும் போன அ.தி.மு.க. இன்று மக்கள் மனதில் இருந்து மெல்லமெல்ல மறைந்து மங்கிக் கொண்டிருக்கிறது என்பதே முழு உண்மையாகும்.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியைப் பொருத்தவரையில் மூன்றரை ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்கள்முன் வைத்தோம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் தனிப்பட்ட முறையில் பயனடையும் திட்டங்களை நிறைவேற்றி வருவதை மக்கள் அனைவரும் நேரடியாக உணர்ந்துள்ளார்கள். சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கும் நிலையையும் தாண்டி, சாதனைகள் என்பவை மக்கள் மனதில் பதிந்ததாக இருந்தது. மகத்தான திட்டங்களைத் தரும் தி.மு.க. அரசுக்கு, மகத்தான வெற்றியைத் தர மனமுவந்து மக்கள் முடிவெடுத்தார்கள். தங்களது பெரிய எண்ணத்தை எண்ணிக்கையாகக் காட்டி வாக்குகளை அள்ளித் தந்துள்ள ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆருயிர் சகோதரர் சந்திரகுமாரை, வெற்றி வேட்பாளராக ஆக்கி - சட்டமன்றத்துக்குள் அழைத்து வர உழைத்த தேர்தல் பொறுப்பாளர்கள் சு. முத்துசாமி உள்ளிட்ட தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அனைத்து உடன்பிறப்புகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள், அத்தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக இருந்து தொகுதி மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராகச் செயல்படுவார்.

எங்களது நன்றியின் அடையாளமாக எப்போதும் மக்களுக்கு உண்மையாக இருப்போம்! ஈரோடு கிழக்கு தொகுதியை மட்டுமல்ல மேற்கு மண்டலம் முழுவதையும் வளப்படுத்த, மேம்படுத்தத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டுவோம். மேற்கு மண்டல மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் காட்டுவோம் என்று உறுதி அளிக்கிறேன்.  

Also Read: ”இந்த ஜென்மத்தில் எங்களை தோற்கடிக்க முடியாது மோடி”: வைரலாகும் கெஜ்ரிவால் பழைய வீடியோ!

முதலமைச்சர் ஸ்டாலின் உரை:

இந்நிலையில், மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக, கண்டனப் பொதுக்கூட்டமானது ஆவடியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரை நிகழ்த்தினார். 

அப்போது பேசிய முதலமைச்சர், ” ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட்டை இழந்துள்ளனர் என்றும், பெரியார் மண்ணில் வென்றுவிட்டுவோம்  என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது மூலம், மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் எனவும் தெரிவித்தார். 

மத்திய பட்ஜெட் குறித்து பேசிய முதலமைச்சர், “ மத்திய பட்ஜெட் ஏமாற்றும் வகையில் உள்ளது. விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்தான அறிவிப்பு இல்லை. புதிய வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் இல்லை. உர மானியத்தை குறைத்துள்ளனர். கடந்த பட்ஜெட்டில் ஆந்திரா - ஆந்திரா என கூறினார்கள். தற்போது பீகார் - பீகார் என கூறுகின்றனர். தேர்தல், எங்கு நடைபெறுகிறதோ, அந்த மாநிலங்களுக்கு அறிவிப்பு வருகிறது.  தமிழ்நாட்டை ஏன் புறக்கணிக்கிறீர்கள். எதற்கெடுத்தாலும், இல்லை என சொல்கிறார்கள். இதற்கு பெயர்தான் பட்ஜெட்டா?. நிதியமைச்சர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது பெருமையா, தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவது பெருமையா. நிதி தராமல் இருக்கலாம். நாங்கல் நீதியை அடையாமல் விடமாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget