மேலும் அறிய

Manapparai School Issue | குழந்தைக்கு பாலியல் தொல்லைஅதிரடி காட்டிய போலீஸ் மணப்பாறை பள்ளியில் பகீர்!

மணப்பாறையில் தனியார் பள்ளியில் 4 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் பள்ளி நிர்வாகிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் பொதுமக்கள் பள்ளியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு எற்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தபள்ளியில் பயின்ற 4 ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வழக்கம் போல் சென்ற நிலையில் மதிய நேரத்தில் வகுப்பறையில் இருந்த மாணவியிடம் பள்ளியின் அறங்காவலரும் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து மாலையில் பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று வசந்தகுமாருக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதுடன் வசந்த குமாரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு ஆத்திரத்தில் பள்ளிக்குள் புகுந்த அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து நொருக்கினர்.

மேலும் அங்கிருந்த காரின் கண்ணாடியையும் உடைத்து நொறுக்கிய தோடு காரை கவிழ்த்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படவே போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடனடியாக வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட பள்ளியின் தாளாளர், நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நொச்சிமேடு என்ற இடத்தில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து நள்ளிரவில் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகளான மராட்ச்சி, செழியன், சுதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலெட்சுமியை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மணப்பாறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்திகள் வீடியோக்கள்

ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vaithilingam joined DMK: திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்
திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்
அதிகாரிகளை இடமாற்ற ரூ.366 கோடி ஊழல்; அதிரவைக்கும் அமலாக்கத்துறை அறிக்கை- நடந்தது என்ன?
அதிகாரிகளை இடமாற்ற ரூ.366 கோடி ஊழல்; அதிரவைக்கும் அமலாக்கத்துறை அறிக்கை- நடந்தது என்ன?
DMK alliance: திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
Iran USA: தொட்டா ஈரானை துடைச்சு போட்ருவோம்.. அமெரிக்காவை எரிச்சிடுவோம் - கடும் வார்னிங், முற்றும் மோதல்
Iran USA: தொட்டா ஈரானை துடைச்சு போட்ருவோம்.. அமெரிக்காவை எரிச்சிடுவோம் - கடும் வார்னிங், முற்றும் மோதல்
ABP Premium

வீடியோ

ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaithilingam joined DMK: திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்
திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்
அதிகாரிகளை இடமாற்ற ரூ.366 கோடி ஊழல்; அதிரவைக்கும் அமலாக்கத்துறை அறிக்கை- நடந்தது என்ன?
அதிகாரிகளை இடமாற்ற ரூ.366 கோடி ஊழல்; அதிரவைக்கும் அமலாக்கத்துறை அறிக்கை- நடந்தது என்ன?
DMK alliance: திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
Iran USA: தொட்டா ஈரானை துடைச்சு போட்ருவோம்.. அமெரிக்காவை எரிச்சிடுவோம் - கடும் வார்னிங், முற்றும் மோதல்
Iran USA: தொட்டா ஈரானை துடைச்சு போட்ருவோம்.. அமெரிக்காவை எரிச்சிடுவோம் - கடும் வார்னிங், முற்றும் மோதல்
Gold Rate Peaks Jan.21st: உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா.? 3 நாட்களில் ரூ.7000 உயர்ந்த தங்கம்; இன்றும் அதிரடியாக உயர்வு
உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா.? 3 நாட்களில் ரூ.7000 உயர்ந்த தங்கம்; இன்றும் அதிரடியாக உயர்வு
Sunita Williams: போதும்டா..! 27 வருடங்கள், 3 மிஷன்கள், வானில் 608 நாட்கள் - ஓய்வை அறிவித்த சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams: போதும்டா..! 27 வருடங்கள், 3 மிஷன்கள், வானில் 608 நாட்கள் - ஓய்வை அறிவித்த சுனிதா வில்லியம்ஸ்
TN Roundup: ரெட் ஜோனாக மாறிய சென்னை, NDA கூட்டணி தீவிரம், ED ரெய்டு ஓவர் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ரெட் ஜோனாக மாறிய சென்னை, NDA கூட்டணி தீவிரம், ED ரெய்டு ஓவர் - தமிழகத்தில் இதுவரை
ஒபிஎஸ்-ஸின் கடைசி நம்பிக்கையும் ஓவர்..! ஆதரவாளர்கள் கூடாரம் காலி - இன்று திமுகவில் இணையும் எம்.எல்.ஏ.,?
ஒபிஎஸ்-ஸின் கடைசி நம்பிக்கையும் ஓவர்..! ஆதரவாளர்கள் கூடாரம் காலி - இன்று திமுகவில் இணையும் எம்.எல்.ஏ.,?
Embed widget