News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Munthiri Kothu: புரோட்டீன் நிறைந்த முந்திரி ஸ்நாக் ரெசிபி! முந்திரி கொத்து செய்வது இப்படித்தான்!

சுவையான முந்திரி கொத்து எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

தேவையான பொருட்கள்

பாசிப்பயிறு- 2 கப் 
வெல்லம் -2 கப் 
அரிசிமாவு- 1 கப் 
தேங்காய் -1/2 முடி (துருவியது)
மைதா மாவு- 2 ஸ்பூன் 
ஏலக்காய் தூள்-1 ஸ்பூன் 
எள் - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள்- 1/2ஸ்பூன்
நெய் - 3 ஸ்பூன் 
உப்பு- தேவையானஅளவு
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் பாசிப்பயிரை சேர்த்து லேசாக வறுத்து  ஆற வைக்க வேண்டும்.

இதை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து தட்டிற்கு மாற்றி இதில் ஏலக்காய் தூள் தூவிக்கொள்ள வேண்டும். 

பின் அதே கடாயில் எண்ணெய் சேர்க்காமல், துருவிய தேங்காய் சேர்த்து, நன்கு வாசம் வறும் வரை தீயாமல் வறுத்து,  பின் அதில் சிறிது எள்ளு சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, வெல்லம் சேர்த்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, அடுப்பின் தீயினை மிதமாக வைத்து, கரண்டியால் கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பாகு பதம் வரும் வரை கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 

பின் பாகை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் அரைத்த பாசிப்பருப்பு மாவு  வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவல், சிறிது நெய் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி விட்டு பிசைந்துக் கொள்ள வேண்டும். 

பிசைந்து வைத்துள்ள மாவை, சூடாக இருக்கும் போதே,  கையில் சிறிது நெய் தடவி கொண்டு, சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். பிடித்த உருண்டைகளை, சுமார் 45 நிமிடங்கள் வரை அப்ப்படியே  வைத்து விட வேண்டும். 

இப்போது ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசிமாவு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு தயார் செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து,  இதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், தீயினை சிம்மில் வைத்து விட்டு, உருண்டைகளை எடுத்து மைதா கரைசலில் டிப் செய்து எண்ணெய்யில் சேர்த்து, பொன்றமாக பொரித்து எடுத்தால் சுவையான முந்திரி கொத்து தயார். 

Published at : 05 Jan 2024 03:40 PM (IST) Tags: munthiri kothu cashew nut kothu cashew snack

தொடர்புடைய செய்திகள்

Gobi Paratha Recipe: சுவையான கோபி பராத்தா செய்வது எப்படி? ரெசிபி

Gobi Paratha Recipe: சுவையான கோபி பராத்தா செய்வது எப்படி? ரெசிபி

Smoothie Recipes: ஆரோக்கியமான ஸ்மூத்தி ரெசிபிகள் இதோ!

Smoothie Recipes: ஆரோக்கியமான ஸ்மூத்தி ரெசிபிகள் இதோ!

Adulteration in Watermelon: தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்..

Adulteration in Watermelon: தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்..

125 கிடாய், 2600 கிலோ அரிசி: ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!

125 கிடாய், 2600 கிலோ அரிசி:  ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!

Corn and Curry Leaves Rice: ஊட்டச்சத்து மிகுந்த ஸ்வீட்கார்ன் - கருவேப்பிலை சாதம் -ரெசிபி இதோ!

Corn and Curry Leaves Rice: ஊட்டச்சத்து மிகுந்த ஸ்வீட்கார்ன் - கருவேப்பிலை சாதம் -ரெசிபி இதோ!

டாப் நியூஸ்

Amitshah: ஒடிசாவை தமிழன் ஆள்வதா? டார்கெட் செய்த அமித்ஷா.. பாஜகவை அலறவைக்கும் விகே பாண்டியன்!

Amitshah: ஒடிசாவை தமிழன் ஆள்வதா? டார்கெட் செய்த அமித்ஷா.. பாஜகவை அலறவைக்கும் விகே பாண்டியன்!

காஞ்சியில் கூடிய லட்சக்கணக்கான மக்கள்..! காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை..!

காஞ்சியில் கூடிய லட்சக்கணக்கான மக்கள்..! காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை..!

Breaking News LIVE: தங்கம் விலையில் மாற்றமில்லை.. தொடர்ந்து அதிகரிக்கும் வெள்ளி விலை.. இன்றைய நிலவரம்..

Breaking News LIVE: தங்கம் விலையில் மாற்றமில்லை.. தொடர்ந்து அதிகரிக்கும் வெள்ளி விலை.. இன்றைய நிலவரம்..

USA vs BAN: முதல் வெற்றியே முத்தான வெற்றி..! வங்கதேச அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த அமெரிக்கா அணி..!

USA vs BAN: முதல் வெற்றியே முத்தான வெற்றி..! வங்கதேச அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த அமெரிக்கா அணி..!