Masor Tenga : அசத்தலான சுவையில் அசாமிய மீன் குழம்பு.. மசுர் டெங்கா செய்முறை பார்க்கலாம்..
மசுர் டெங்கா எனப்படும் அசாமிய மீன் குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
மீன் குழம்பு நாம் அனைவரும் அறிந்ததே. இருந்தபோதிலும் இந்த மீன் குழம்பை ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொரு விதமாக சமைக்கின்றனர். இதில் ஒவ்வொரு மீன் குழம்பும் ஒரு சுவையில் இருக்கும். அந்த வகையில் தற்போது நாம் அசாமிய மீன் குழம்பு ரெசிபிதான் ட்ரை பண்ண போறோம். இது சூடான சாதத்துடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். இதன் சுவை நாம் வழக்கமாக சாப்பிடும் மீன் குழம்பின் சுவையை விட சற்று வித்தியாசமாக இருக்கும். வாங்க மசுர் டெங்கா ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 4 துண்டுகள் கெண்டை மீன்
- 1/2 தேக்கரண்டி உப்பு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 கப் கடுகு எண்ணெய்
- 1 பீர்க்கங்காய் நறுக்கியது
- 4 பெரிய தக்காளி நறுக்கியது
- 1/4 தேக்கரண்டி வெந்தயம்
- பாதி எலுமிச்சை பழத்தின் சாறு
செய்முறை
1.மீன் துண்டுகள் மீது 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் தூவி, சமமாக பூச வேண்டும்.
2.ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, மீனை வெளியே மிருதுவாகப் பொரித்து உள்ளே வேகும் வரை வறுக்க வேண்டும். வறுத்த மீன்களை தனியே எடுத்து வைத்து விட வேண்டும்.
3.மீதமுள்ள எண்ணெயில், வெந்தயத்தை சேர்த்து, மிதமான தீயில் வதக்க வேண்டும்.
4. இப்போது நறுக்கிய பீர்க்கங்காயை சேர்த்து அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு மூடியால் மூடி 7-8 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பீர்க்கங்காய் வதங்கியதும், தக்காளியை சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.
5. ஒரு மூடியால் மூடி, தக்காளி கூழ் ஆகும் வரை 4-5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். உங்கள் கரண்டியின் பின்புறத்தை பயன்படுத்தி காய்கறிகளை மசித்துக்கொள்ள வேண்டும்.
6. 3 கப் வெதுவெதுப்பான நீரைச் சேர்த்து, அடுப்பின் தீயை சற்று அதிகமாக வைக்க வேண்டும். குழம்பு ஒரு கொதி வந்ததும், உங்கள் விருப்பப்படி உப்பை சரிபார்க்க வேண்டும்.
7. மீன் துண்டுகளைச் சேர்த்து, 5-6 நிமிடங்களுக்கு மீன் கறி நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவைக்க வேண்டும்.
8. இப்போது இந்த கறியை அடுப்பில் இருந்து இறக்கி இதன் மீது சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து விட வேண்டும். மசுர் டெங்காவை நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து சூடான சாதத்துடன் பரிமாறலாம். இதன் சுவை அலாதியாக இருக்கும்.
மேலும் படிக்க
Mukesh Ambani: 'முகேஷ் அம்பானியை சுட்டுக் கொல்வோம்' மின்னஞ்சலில் வந்த கொலை மிரட்டலால் பரபரப்பு