'வங்கிக்கணக்கு முடிகிறது... OTP சொல்லுங்கள்' முதியவரிடம் 4 லட்சம் அபேஸ் செய்த மோசடி கும்பல் - தொடரும் சைபர் கொள்ளைகள்
புதுச்சேரி : வங்கிக்கணக்கு இன்றுடன் முடிகிறது என கூறி OTP சொல்லுங்கள் என கேட்டு முதியவரிடம் 4 லட்சம் அபேஸ் செய்த மோசடி கும்பல்
புதுச்சேரி அரவிந்தர் வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 61). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் வைத்தியநாதன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர், வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக தன்னை முதலில் அறிமுகம் செய்து கொண்டு பேசினார்.
மேலும் அவர், தங்களது வங்கிக்கணக்கு இன்றுடன் காலாவதி ஆகிறது. இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு ரகசிய எண் (OTP) வரும். அதை சொன்னால் வங்கி கணக்கை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க உதவி செய்வதாக தெரிவித்தார்.
4 லட்சம் அபேஸ்:
இதனை உண்மை என்று நம்பிய வைத்தியநாதன் செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண், ஆதார், பான் கார்டு, வங்கி விவரங்களை தெரிவித்தார். இதையடுத்து அவர் இணைப்பை துண்டித்தார். அடுத்த சில நிமிடங்களில் வைத்தியநாதன் வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னுடன் பேசிய வங்கி மேலாளரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால் அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர்தான், வங்கி மேலாளர் போல் மர்மநபர் பேசி பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.
ரகசிய எண் பகிர வேண்டாம்:
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வைத்தியநாதன், இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வளர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில், பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை யாருக்கு தெரிவிக்க வேண்டாம். வங்கி மேலாளர்கள் ஒருபோதும் ரகசிய எண்ணை கேட்க மாட்டார்கள். எனவே யாரேனும் உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால் தெரிவிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
புதுச்சேரி இணைய வழி காவல்துறை விழிப்புணர்வு
பொதுமக்களுக்கு உடனடி லோன் ஆப் இன்ஸ்டன்ட் லோன் ஆப் சம்பந்தமாக புதுச்சேரி இணைய வழி காவல்துறை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவிப்பது என்னவென்றால், இதுபோன்ற உடனடி மொபைல் ஆப்பிள் எந்த ஒரு வெரிஃபிகேஷனும் செய்யாமல் கொடுக்கப்படுகின்ற லோன்களில் 99% பயனாளிகள் இது போலவே மிரட்டப்படுகின்றனர். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் ரூபாய் என கட்டி தங்களுடைய மன நிம்மதியையும் பொதுமக்கள் இழக்கின்றனர். மேலும் இணைய வழி மோசடிக்காரர்கள் லோன் வாங்கியவர்களை அச்சுறுத்த அவர்கள் படங்களை மார்பிங் செய்து அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களை மிரட்டுகின்றனர்.
புதுச்சேரி இணைய வழி காவல்துறை விழிப்புணர்வு
பொதுமக்களுக்கு உடனடி லோன் ஆப் இன்ஸ்டன்ட் லோன் ஆப் சம்பந்தமாக புதுச்சேரி இணைய வழி காவல்துறை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவிப்பது என்னவென்றால், இதுபோன்ற உடனடி மொபைல் செயலிகளில் எந்த ஒரு வெரிஃபிகேஷனும் செய்யாமல் கொடுக்கப்படுகின்ற லோன்களில் 99% பயனாளிகள் இது போலவே மிரட்டப்படுகின்றனர்.
ஆயிரம் ரூபாய் கடன்களுக்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் ரூபாய் என கட்டி தங்களுடைய மன நிம்மதியையும் பொதுமக்கள் இழக்கின்றனர். மேலும் இணைய வழி மோசடிக்காரர்கள் லோன் வாங்கியவர்களை அச்சுறுத்த அவர்கள் படங்களை மார்பிங் செய்து அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களை மிரட்டுகின்றனர்.
கடன் செயலிகள்:
பொதுமக்கள் குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாத இது போன்ற லோன் ஆப்புகளில் உடனடி கடனை வாங்கி இதுபோன்று பணத்தையும் மானத்தையும் இழக்க வேண்டாம் என இணைய வழி காவல்துறை தங்களுக்கு எச்சரிக்கை செய்கிறது. மேலும் உடனடி லோன் ஆப்பிள் நாம் கேட்கின்ற தொகையை அவர்கள் கொடுப்பதில்லை ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு முப்பதாயிரம் ரூபாய் உங்களுக்கு கொடுத்தோம் என்று வசூலிக்க ஆரம்பிக்கின்றனர். அதனால் பொதுமக்கள் இது போன்ற உடனடி லோன் ஆப்பில் இருந்து கடன் பெற வேண்டாம் என்றும் இது சம்பந்தமான புகார் ஏதேனும் இருந்தால் 1930 விற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.
பொதுமக்கள் குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாத இது போன்ற லோன் ஆப்புகளில் உடனடி கடனை வாங்கி இதுபோன்று பணத்தையும் மானத்தையும் இழக்க வேண்டாம் என இணைய வழி காவல்துறை தங்களுக்கு எச்சரிக்கை செய்கிறது. மேலும் உடனடி லோன் ஆப்பிள் நாம் கேட்கின்ற தொகையை அவர்கள் கொடுப்பதில்லை ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு முப்பதாயிரம் ரூபாய் உங்களுக்கு கொடுத்தோம் என்று வசூலிக்க ஆரம்பிக்கின்றனர். அதனால் பொதுமக்கள் இது போன்ற உடனடி லோன் ஆப்பில் இருந்து கடன் பெற வேண்டாம் என்றும் இது சம்பந்தமான புகார் ஏதேனும் இருந்தால் 1930 விற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.