Kerala Egg Roast: சுவையான முட்டை ரோஸ்ட் ரெசிபி! புதிய ஸ்டையில் இப்படி செய்து பாருங்க!
Kerala Egg Roast: உருளைக் கிழங்கு, முட்டை இரண்டையும் வைத்து செய்யும் சுவையான ரோஸ்ட் ரெசிபியை காணலாம்.
கேரள ஸ்டைலில் முட்டை ரோஸ்ட் சுவையான ஒரு ரெசிபி. முட்டையில்லாமல் எந்த உணவையும் சாப்பிட முடியாது என்பவர்களுக்கு இது புதிய டிஷாக இருக்கும். வெங்காயம், முட்டை, உருளைக் கிழங்கு மட்டும் இருந்தால் போதும்.
கேரளா முட்டை ரோஸ்ட்
என்னென்ன தேவை?
வெங்காயம் - 2
உருளைக் கிழங்கு - 2
சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு ஸ்பூன்
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து எடுத்துக்கொள்ளலாம். மிதனமான தீயில், கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், வேகவைத்த உருளைக் கிழங்கை சேர்க்கவும். இரண்டும் நன்றாக வதங்கியதும் உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ், தேவையெனில் சிறிதளவு தக்காளி சாஸ் சேர்க்கலாம். இது நன்றாக வதங்கியதும் முட்டையை அதில் உடைத்து ஊற்றவும். மூடி வைத்து முட்டை வேகவைக்கவும். 3 நிமிடங்களில் கேரளா ஸ்டைல் முட்டை ரோஸ்ட் தயார்.
விருப்பமெனில் இதற்கு மிளகுத் தூள் சேர்த்தும் செய்யலாம்.
மிளகு
முட்டையுடன் மிளகு சேர்ப்பது ஆரோக்கியமானது. மிளகில் உள்ள பெப்பரைன் என்ற பொருள் தொப்பை மற்றும் இடுப்பில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும் சொல்லப்படுகிறது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்யில் உள்ள கொழுப்பு உடலுக்கு நல்லது. அதற்காக அதிகமான அளவு எடுத்துகொள்ள வேண்டும் என்றில்லை. இனி ஒவ்வொரு முறையும் முட்டை சமைத்தால் அதைத் தேங்காய் எண்ணெய் ஊற்றி சமைத்துப் பாருங்கள். சுவையும், மனமும், பலனும் கூடுதலாக இருக்கும். தேங்காய் எண்ணெயும் அளவோடு சாப்பிடுவது உடலுக்கும் நல்லது.
முட்டை பசி உணர்வை சரிசெய்யவும் அதே வேளையில் சுவைமிக்க உணவாக முட்டை இருக்கும். வேக வைத்த முட்டையை சாப்பிடுவதே நல்லது என்று சொல்லப்படுகிறது. ஆம்லெட் என்றால் குறைவான எண்ணெய் பயன்படுத்தி செய்யலாம். அத்துடன் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் தரும். முட்டை புரதத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது. மஞ்சள் கருவில் நிறைய சத்துக்கள். உங்களுக்கு வேகவைத்த முட்டைகள் பிடிக்கவில்லை என்றால், 'scrambled Egg' சாப்பிடலாம்.
மேலும் வாசிக்க..
Egg Idli: அடடே! முட்டை இட்லி செய்து பாருங்களேன்! ரெசிபி இதோ!
Egg Manchurian: சுவையான முட்டை மஞ்சூரியன் தெரியுமா உங்களுக்கு? ரெசிபி இதோ!