Prawn Tikka Masala: இறால் டிக்கா மசாலா.. ஞாயிற்றுக்கிழமை விருந்துக்கு இது சிம்பிள் ரெசிப்பி..
இறால் டிக்கா மசாலா(Prawn Tikka Masala).. சொல்லும்போதே நாவெல்லாம் எச்சில் சொட்டுகிறதா? எப்போதும் இதை நீங்கள் ஹோட்டலில் ஆர்டர் செய்துதான் வாங்கி சாப்பிட்டுப் பழகியிருப்பீர்கள் அல்லவா?
Prawn Tikka Masala Recipe இறால் டிக்கா மசாலா.. சொல்லும்போதே நாவெல்லாம் எச்சில் சொட்டுகிறதா? எப்போதும் இதை நீங்கள் ஹோட்டலில் ஆர்டர் செய்துதான் வாங்கி சாப்பிட்டுப் பழகியிருப்பீர்கள் அல்லவா? இறால் டிக்கா மசாலாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்:
20 முதல் 25 ஜம்போ இறால்கள் ( சுத்தப்படுத்தி, நரம்பு நீக்கி வைத்துக் கொள்ளுங்கள்0
மேரினேஷனுக்கு தேவையான பொருட்கள்:
* எலுமிச்சை (பாதி)
* உப்பு ஒரு தேக்கரண்டி
* 1 தேக்கரண்டி மிளகாய்ப் பொடி
* 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
* அரை கப் தயிர்
* கால் கப் க்ரீம்
* 2 வெங்காயங்கள் (பொடியாக நறுக்கியது)
* 3 தக்காளிகள் ( பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்)
* 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் பொடி
* 1 தேக்கரண்டி உப்பு
* 1 தேக்கரண்டி சீரகம்
* 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா பவுடன்
* 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
* 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
* 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
* 1 டீஸ்பூன் தந்தூரி மசாலா
இறால் டிக்கா மசாலா செய்வது எப்படி?
1. ஒரு பவுலில் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
2. இறாலை அதில் சேர்த்து 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்
3. ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றவும். அது உருகியதும். ஊறவைத்த இறாலை அதில் கொட்டி 4 முதல் 5 நிமிடங்கள் வரை நன்றாக சமைக்கவும். பின்னர் அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
4. அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் சீரகத்தை போட்டு பொரிய விடவும்
5. பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும். அது நன்றாக பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும்.
6. அதன்பின்னர் வெங்காயத்தின் மீது இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியனவற்றை சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒரு நிமிடம் வரை வதக்கவும். நன்றாக மனம் வரும்வரை வதக்கவும்.
7. பின்னர் தக்காளி பியூரி செய்யவும். அதையும் கடாயில் சேர்க்கவும்.
8. பின்னர் மிதமான சூட்டில் 4 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
9. அடுத்ததாக க்ரீம், தயிர், கரம் மசாலா ஆகியனவற்றை சேர்க்கவும்.
10. இந்தக் கலவை எல்லாம் பச்சை வாடை போகும் அளாவுக்கு வெந்த பின்னர் வேகவைத்த பிரான்ஸ் மற்றும் தந்தூரி மசாலா தூள் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
11. ப்ரான் டிக்கா தயார். நான் ரோட்டி அல்லது சூடான சாதத்துடன் பறிமாறலாம்.
இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். உணவில் போதிய வைட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால், எலும்பின் தரம், திணிவு, திடம் மற்றும் ஒட்டுமொத்த திணிவில் சிதைவு ஏற்படும். இது ஆஸ்டியோபோரோசிஸ்என்ற நோய்க்கான அறிகுறியாகும்.
இறால் சாப்பிடுவதால் நமக்கு புரதம், கால்சியம், பொட்டாசியம் கிடைப்பதால் சீரான இடைவெளியில் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.