Cauliflower Rice : வெய்ட் குறைக்கணுமா? காலிஃப்ளவர் ரைஸ் ஒரு நல்ல சாய்ஸ்.. இதோ ரெஸிபி..
லெமன் ரைஸ், தயிர் சோறு என சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர்கள் நாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஃப்ரைட் ரைஸ், சிக்கன் ரைஸ், செஸ்வான் ஃப்ரைடு ரைஸ் என்று நாக்கு பழக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
நம்மூர் கட்டு சாதத்துக்கு பெயர் போனது. பொங்கல், புளியோதரை, லெமன் ரைஸ், தயிர் சோறு என சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர்கள் நாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஃப்ரைட் ரைஸ், சிக்கன் ரைஸ், செஸ்வான் ஃப்ரைடு ரைஸ் என்று நம் நாக்கு பழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சரி இதில் இன்னும் ஒருபடி மேலே சென்று கான்டினென்டல் ஏன் வீட்டிலேயே ட்ரை பண்ணக்கூடாது என்று நினைப்பவர்களுக்காகத் தான் நாங்கள் இந்த ரெசிபியைத் தருகிறோம்.
காலிஃப்ளவர் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் 1
வெங்காயத் தாள் தேவையான அளவு
ஆலிவ் ஆயில்
உப்பு மற்றும் மிளகுத்தூள்
அத்துடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு.
காலிஃப்ளவரை எப்படி துருவுவது..
காலிஃப்ளவர் சோறு செய்ய முதலில் காலிஃப்ளவரை அரிசி போல் சிறிதாக துருவிக் கொள்ள வேண்டும். அதற்கு காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக வெட்டி அதை ப்ராசஸ்ஸரில் போட்டு அது அரிசி போல் துருவப்படும் வரை அரைக்கவும்.
பின்னர் அதனை ஒரு பவுலில் கொட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பேன் வைத்து அதில் சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் துருவிய காலிஃப்ளவருக்கு ஏற்ற அளவில் வெங்காயத் தாளை வெட்டி சேர்த்து வதக்கவும். அது பச்சை வாடை போகும் வரை வதங்கிய பின்னர் அதில் துருவிய காலிஃப்ளவரையும் சேர்க்கவும். பின்னர் அதுவும் நன்றாக வதங்கும்படி வதக்கவும். அது முக்கால் பதம் வெந்திருக்கும் போது உப்பும், மிளகுத் தூளும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கிவிட்ட காலிஃப்ளவருக்கு ஏற்ப எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும்.
அவ்வளவு தான் பறிமாறலாம். இதுதான் கான்டினென்டல் ஸ்டைல் காலிஃப்ளவர் ரைஸ் ரெஸிபி. ஆனால் இது நம் கட்டுச் சோறு போலவோ, இல்லை ஃப்ரைடு ரைஸ் போலவே மெயின் கோர்ஸ் அல்ல. இதை தனியாக சாப்பிடலாம். இல்லாவிட்டால் மற்ற வகை சாதத்துக்கு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.
ஆனால் நம்மூர் ஸ்டைலில் உண்மையிலேயே அரிசி சேர்த்து செய்யும் காலிஃப்ளவர் சாதமும் இருக்குங்க. நம்ம பன்னீர் புலாவ் செய்துபோல் ஸ்டைலில் எல்லாம் செய்துவிட்டு வேகவைத்து பொடியாக உதிர்க்கப்பட்ட காளிஃப்ளவரை சேர்த்து வதக்கிச் செய்தால் காலிப்ளவர் சாதம் தயார்.
அன்றாடம் நாம் வழக்கமாக சாப்பிடும் உணவையே செய்து சாப்பிடுவது சில நேரம் சலிப்பை ஏற்படுத்தலாம். ஆகையால் எப்போதாவது இதுபோன்ற உணவு வகைகளை செய்து கொண்டால் அது ரொட்டீன் லைஃபில் கொஞ்சம் சுவை சேர்க்கும். அதுவும் இப்படி முற்றிலும் வித்தியாசமான உணவு வொர்த் ட்ரையிங் வகையறாவைச் சேர்ந்தது.