(Source: ECI/ABP News/ABP Majha)
அலர்ஜி முதல் செரிமானக் கோளாறு வரை: பப்பாளியை எப்போதெல்லாம் சாப்பிடக்கூடாது? விளைவுகள் என்ன?
பப்பாளி அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒரு பழம். சில நேரங்களில், அது தீங்கு விளைவிக்கும். அதனால்தான் பப்பாளியை எவ்வெப்போது சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதன் பக்கவிளைவுகளைப் பற்றி பேசுவதற்கு முன், அதன் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றியும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
பப்பாளி அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒரு பழம். சில நேரங்களில், அது தீங்கு விளைவிக்கும். அதனால்தான் பப்பாளியை எவ்வெப்போது சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதன் பக்கவிளைவுகளைப் பற்றி பேசுவதற்கு முன், அதன் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றியும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
பப்பாளியின் நன்மைகள்
இந்துஸ்தான் டைம்ஸில் ஊட்டச்சத்து நிபுணர் அபிலஷா வி கூறுவதாவது, பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துகளுடன், பல வகையான ஆன்டிஆக்ஸிட்கள் காணப்படுகின்றன. இது செரிமான செயல்முறையை துரிதப்படுத்துவதுடன் குடல் எரிச்சல் நோயிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. பப்பாளியில் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் உள்ளன, இது சருமத்திற்கு பளபளப்பை வழங்குகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, பப்பாளி இரத்த சர்க்கரையை குறைக்கும். இது வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பப்பாளி சாப்பிடுவது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
பழுக்காத பப்பாளியை உண்பது ஜீரணத்தை மேம்படுத்தும். உங்கள் உடலையே ஒட்டுமொத்தமாக சுத்தப்படுத்தும். இதில் உள்ள பப்பாயின் என்ற என்சைம் குடலில் உள்ள அமிலங்கள் சுரப்பை ஊக்கப்படுத்தி செரிமானத்தை உறுதி செய்யும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் பப்பாளி காய்க்கு பங்கு இருக்கிறது. குறிப்பாக வயிற்றில் உள்ள நச்சை அகற்றுவதில் பெரும் பங்கிருக்கிறது.
பப்பாளியின் பக்க விளைவுகள்
பப்பாளியை மருந்துடன் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். அமெரிக்க தேசிய நூலகம் மேற்கோள் காட்டியதுபடி, பப்பாளி சில மருந்துகளுடன் வினைபுரிந்து இரத்தத்தை மெல்லியதாக்குகிறது. இதன் விளைவாக, உடலில் இரத்தப்போக்கு எளிதில் ஏற்படலாம். ஆதலால் பழத்தை எந்த மருந்திலும் சாப்பிடக்கூடாது.
கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
பச்சை பப்பாளியில் அதிக அளவு லேட்டெக்ஸ் உள்ளது. இது கருப்பையின் சுவரில் சுருக்கத்தை அதிகரிக்கும். பப்பாளியில் உள்ள பாப்பைன்(Papain) கூறுகள் உடலில் உள்ள செல் சவ்வை சேதப்படுத்துகிறது. கருப்பையில் வளரும் குழந்தையின் வளர்ச்சியில் உயிரணு சவ்வு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால்தான் கர்ப்பிணிப் பெண்கள் பச்சை பப்பாளியை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
செரிமானக் கோளாறு
பப்பாளியில் நார்ச்சத்து அதிகம். இது மலச்சிக்கல் பிரச்சனையை குண்ப்படுத்த உதவும். அதேவேளையில் அதிக அளவில் பப்பாளி உட்கொள்வது செரிமானத்தை கெடுக்கவும் செய்யும். பப்பாளியில் உள்ள லேடெக்ஸ் வயிற்று வலியை ஏற்படுத்துவதோடு வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும். இது பப்பாளியை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும் என்பதற்கான ஓர் முக்கிய காரணம்.
குறைந்த சர்க்கரை
பப்பாளி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். ஆனால் சில நேரங்களில் அது இரத்த சர்க்கரையை அளவுக்கதிகமாக குறைக்கிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சினைகளை அதிகரிக்கும். ஆதலால் சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி பப்பாளியை சாப்பிடக்கூடாது.
அலர்ஜி
பப்பாளியை அதிகமாக உட்கொள்வது சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். வீக்கம், தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் தோலில் தடிப்புகள் போன்ற் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த பக்கவிளைவுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், நீங்கள் பப்பாளியை உட்கொள்ளக்கூடாது. லேடெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் அல்லது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதார நிபுணர் அறிவுறுத்தினார்.