Rice Chips : மக்களே.. சமைத்த சாதம் மீதமாகிவிட்டதா? வற்றலும், ஆப்பமும் ரெடி பண்ணலாம் வாங்க..
பழைய சாதத்தில் வத்தல் மட்டும் ஆப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வீட்டில் சாதம் மீந்து விட்டால் இனி கீழே கொட்ட வேண்டாம். அதை உபயோகமான முறையில் பயன்படுத்தலாம். ஆம் மீதமாகிப்போன பழைய சாதத்தை வைத்து எப்படி வற்றல் மற்றும் ஆப்பம் செய்து என்றுதான் இபோது நாம் பார்க்க போகின்றோம்.
தேவையான பொருட்கள்
சாதம்
உப்பு
சீரகம்
சிகப்பு மிளகாய் தூள்
எண்ணெய்
செய்முறை
இரவு மீதமாகிப்போன பழைய சாதத்தை பிழிந்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சீரகம் சேர்த்து காரத்திற்கு ஏற்றவாறு மிளகாய்ய் பொடியை சேர்க்கவும்.
இந்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தட்டில் நன்றாக எண்ணெய்யை தடவி அதில் பிசைந்து வைத்துள்ள சாதத்தை தேவையான அளவிற்கு சிறிது சிறிதாக கிள்ளி போட்டு கொள்ள வேண்டும்.
பிறகு இதை நன்றாக வெயிலில் காயவைத்து வற்றலை எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும்.
எண்ணெய் காய்ந்ததும் இந்த வற்றலை எண்ணெயில் சேர்த்து பொரித்து சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும்.
பழைய சாதத்தில் ஆப்பம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 3 கப்
உளுந்தம் பருப்பு – முக்கால் கப்
ஒரு முழு தேங்காய் துருவியது
பழைய சாதம் – 1 கப்
செய்முறை
பச்சரியையும், உளுந்தையும் நன்றாக கழுவ வேண்டும்.
தொடர்ந்து அதில் தண்ணீர் சேர்த்து 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பச்சரி, உளுந்து ஊறிய பிறகு, அதனுடன் துருவிய தேங்காய், பழைய சாதம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் அரைத்து எடுக்க வேண்டும். ஆப்ப மாவு பதத்துக்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மாவை, தற்போது கிரைண்டரில் இருந்து மாவை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிட்டு. அடுத்த நாள் காலை வரை புளிக்கவைக்க வேண்டும்.
அடுத்த நாள் காலையில் இந்த மாவு பொங்கி இருக்கும். நாம் ஆப்பம் சுட தேவையான அளவு மாவை மட்டும் எடுத்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து ஆப்பம் சுடலாம். அவ்வளவுதான் சுவையான ஆப்பம் தயார்.
மேலும் படிக்க
Banana Bonda: தித்திப்பான வாழைப்பழ போண்டா! சூப்பர் சுவையில் அசத்தலாக செய்வது இப்படித்தான்!
Bread Chilli:காரசாரமான சில்லி பிரெட்... இப்படி செய்தால் சுவை வேற லெவலில் இருக்கும்..
Raddish Pachadi: முள்ளங்கி பச்சடி! இப்படி செய்தால் கூட ஒரு கரண்டி எக்ஸ்ட்ரா வாங்கி சாப்டுவீங்க!