Banana Bonda: தித்திப்பான வாழைப்பழ போண்டா! சூப்பர் சுவையில் அசத்தலாக செய்வது இப்படித்தான்!
சுவையான வாழைப்பழ போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மாலை நேரம், மழை நேரம் போன்ற நேரங்களில் நாம் சுவையான ஸ்நாக்ஸ் சுவைக்க விரும்புவோம். அதுவும் வீட்டிலேயே எளிமையாக செய்யக் கூடியதாக இருந்தால், இன்னும் நன்றாக இருக்கும். தற்போது நாம் வாழைப்பழ இனிப்பு போண்டா எப்படி செய்வது என்று தான் பார்க்க போகின்றோம். இந்த போண்டாவை நாம் குறைந்த நேரத்தில் மிகவும் எளிமையாக, சுவையாக செய்து விட முடியும். வாங்க, சுவையான வாழைப்பழ போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காய்ச்சிய பால் -1/2 கப்
ரவை-1/4 கப்
தேங்காய் துருவல்-1/4 கப்
சர்க்கரை-2 ஸ்பூன்
முந்திரி பருப்பு-2 ஸ்பூன் (பொடித்தது)
மஞ்சள் - 1 சிட்டிகை
உப்பு-1 சிட்டிகை
ஏலக்காய் பொடி- 2 சிட்டிகை
நெய்-தேவையான அளவு
செய்முறை
ஒரு வாயகன்ற கடாயை அடுப்பில் வைக்கவும். அதில் சிறிது நெய் சேர்த்து, வெட்டிய வாழைப்பழ துண்டுகளை நெய்யில் சேர்த்து வதக்கி மசித்து விட வேண்டும்.
பின் கடாயில் ரவை, துருவிய தேங்காய், காய்ச்சிய பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும். வாழைப்பழமும்,ரவையும் பாலில் நன்றாக வெந்து அல்வா பதத்திற்கு வரும்.
இப்போது சர்க்கரையை கடாயில் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், ஏலக்காய் பொடி மற்றும் உப்பு சேர்த்து தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
கடாயில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேர்ந்து நன்கு வெந்து பின் கெட்டியான கட்டி போன்ற பதத்திற்கு வரும். இப்போது பொடித்த முந்திரி பருப்புகளை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
கடாயில் உள்ள கலவையை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு, ஆற விட வேண்டும். சிறிது ஆறியதும், கலவையை கையில் எடுத்து சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து அந்த உருண்டைகளை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் தித்திப்பான வாழைப்பழ போண்டா தயார்.