Badam Milk Shake: பாதாம் மில்க் ஷேக்: இப்படி செய்து பாருங்க.. சுவை வேற லெவலில் இருக்கும்!
சுவையான பாதாம் மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் - 600 மிலி
சர்க்கரை - தேவையான அளவு
குங்குமப்பூ - சிறிதளவு
கஸ்டர்ட் பவுடர் - ஒரு மேஜை கரண்டி
பாதாம் - 15
முந்திரி, பாதாம் - பொடித்தது சிறிதளவு
செய்முறை
15 பாதாம் பருப்புகளை 1 மணி நேரம் ஊற வைத்து அதன் தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரை லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து காய்ச்ச வேண்டும். லேசாக கொதி வந்ததும் இதில் 4 ஸ்பூன் சர்க்கரை சேர்க்க வேண்டும். உங்களுக்கு தேவைப்பட்டால் சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். பின் சிறிது குங்குமப்பூ சேர்க்க வேண்டும். பாலை 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள பாதாம் பேஸ்ட்டை இதில் சேர்த்து ஒரு நிமிடம் கரண்டியால் கலந்து விட வேண்டும்.
வேறொரு பாத்திரத்தில் 100 மி.லி பால் எடுத்து அதில் ஒரு மேஜைக் கரண்டி கஸ்டர்ட் பவுடரை சேர்க்க வேண்டும். இப்போது அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, கஸ்டர்டு பவுடர் சேர்த்து கலக்கிய பாலை கொதிக்கும் பாலுடன் சேர்க்க வேண்டும். பால் சற்று திக்கான பதம் வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பின் இதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற விட வேண்டும். ஆறியதும் பால் மேலும் சிறிது திக்காக மாறும். ஆறியதும் இதை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி இதை ஃப்ரிட்ஜில் வைத்து 3 மணி நேரத்திற்கு பின் எடுத்து, இதில் முந்திரி, பாதாம் உள்ளிட்ட பொடித்த பருப்புகளை சேர்த்து பரிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க
Volume Eating: குறைந்த கலோரி உணவுகள் உடல் எடையை குறைக்குமா? நிபுணர்கள் சொல்வதென்ன?
Healthy Hair: முடி உதிர்வு பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை தவிர்த்திடுங்க! இதை மட்டும் சாப்பிடுங்க!