Summer Skin Care Tips: அடிக்கிற வெயிலில இருந்து சருமத்தை பாதுகாக்க இந்த டிப்ஸ பாலோ செய்து பாருங்க மக்களே!!
Summer Skin Care Tips in Tamil: கொளுத்தும் வெயிலில் இருந்து நமது சருமத்தை இயற்கை முறையில் பாதுகாக்க இத்தனை வழி இருக்கா?”
கேரட்:
கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு, பன்னீர் இதை சம அளவு எடுத்து அதோட கொஞ்சம் தயிர் சேர்த்து நன்கு கலந்து முகம், கழுத்து பகுதியில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து அதன்பிறகு முகத்தை கழுவி பாருங்க சும்மா பளபளன்னு இருக்கும்.
பால் ஏடு:
தினமும் பசும் பாலில் ஏடு எடுத்து முகம் முழுவதும் நன்கு அழுத்தி தேய்த்து ஊற வைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசுங்க முகம் பிரகாசமாக இருக்கும்.
முட்டையின் மஞ்சள் கரு:
முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதோட பாலாடையும், பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின்பு இளஞ்சூடான நீரில் முகத்தை அலசினால் சொரசொரப்பா இருக்குற முகம் சில நாட்களிலேயே தோல் மிருதுவாக பளபளன்னு மாறிவிடும். இதை மாசத்துக்கு 2 தடவ செஞ்சு பாருங்க..
களிமண்:
களிமண், ரோஸ் வாட்டர், சந்தனப்பொடி சேர்த்து கலந்து முகத்தில தடவி 20 நிமிடம் ஊற வைத்து முகத்தை கழுவி பாருங்க சருமத்துளையில இருக்க அழுக்குகளையெல்லாம் களிமண் உறிஞ்சி அத வெளியேற்றி விடும். இதனால முகம் பொலிவாக இருக்கும்.
ரோஜா இதழ்:
ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு வைத்து அந்த நீரில் தொடர்ந்து முகத்தை கழுவி வந்தால் முகம் புது மெருகோடு சும்மா அழகா இருக்கும்.
பாதாம் பருப்பு:
ஒரு ஐந்து பாதாம் பருப்பை ஊற வைத்து பால் சேர்த்து விழுது போல் அரைத்து தேன் சில துளி கலந்து முகத்தில பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி பாருங்க முகம் பளிச்சினு ஆகிடும்..
பூசணிக்காய் கூழ்:
பூசணிக்காய் கூழ் எடுத்து அதில் முட்டையை உடைத்து நன்கு கலந்து அதில் சிறிது தேன், பாதாம்பால், ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவற்றை கலந்து முகம், கழுத்து பின்பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து நீரில் கழுவ வேண்டும். பின் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த கோடைக்கு சருமம் பாதுகாப்பாகவும், அழகாவும் இருக்கும்
மாம்பழ கூழ்:
கற்றாழை ஜெல்லுடன் மாம்பழ கூழ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியோடும் இருக்கும்
முட்டை வெள்ளைக்கரு:
ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை, தேன் சேர்த்து அடித்து வைத்துக்கொண்டு அதனை 20 நிமிடம் முகத்தில் பூசி அதன்பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் வறண்ட முகம் பிலிவுறும். முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீக்கும்.
கொத்தமல்லி:
கொத்தமல்லி, புதினா சேர்த்து கெட்டியாக அரைத்து முகத்தில் வாரம் ஒரு முறை பூசி வர முக வறட்சி நீங்கி பொலிவுறும்.