மேலும் அறிய
Advertisement
வந்துவிட்டது மழைக்காலம்.. ஆரோக்கியத்தில் கவனம் - என்னென்ன சாப்பிடலாம்?
பருவமழை காரணமாக நோய்கள் வந்து கொண்டு இருக்கும். அதாவது, பருவமழை நேரங்களில் வைரஸ் காய்ச்சல், சளி, இருமல், டெங்கு, வயிற்று பிரச்சனைகள், காலரா போன்றவை வரும். இதை எல்லாம் தவிர்க்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துவது முக்கியம்
கொரோனா பெருந்தொற்று நீண்டு கொண்டிருக்கும் இந்த சூழலில், அடுத்து பருவமழை காரணமாக நோய்கள் வந்து கொண்டு இருக்கும். அதாவது, பருவமழை நேரங்களில் வைரஸ் காய்ச்சல், சளி, இருமல், டெங்கு, வயிற்று பிரச்சனைகள், காலரா போன்றவை வரும். இதை எல்லாம் தவிர்க்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துவது முக்கியம். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை உணவுகள் மூலமும், வாழ்வியல் முறையால் அதிகரிக்கலாம். நோய் வராமல் தடுத்தல், அப்டியே வந்தாலும் அந்த வைரஸ் எதிர்த்து போராட, அந்த வைரஸ்க்கான ஆண்டிபாடிகளை உருவாக்குதல், என ஒவ்வொரு செயலிலும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியமானது.பருவ மழை காலத்தில் உடலை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
- இந்த நேரத்தில் சூடாக சாப்பிட தோன்றும். பூசணி சூப், தக்காளி சூப், முருங்கை சூப், பச்சை பட்டாணி சூப், கலந்த காய்கறி சூப் என ஏதேனும் ஒன்றை தினம் எடுத்து கொள்ளலாம்.சூப்பில் சேர்க்கப்படும், இஞ்சி, மற்றும் பூண்டு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். காய்கறிகளில் இருக்கும் பீட்டா கரோட்டின் னாய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். பூண்டு ஒரு ஆண்டிபயாடிக் உணவு. அசைவ உணவுகளில் இருந்து கிடைக்கும் சூப் ஆனது அற்புதமான நோயெதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
- உளர் பழங்கள் - எந்த பருவநிலை ஆனாலும் தினம் சில எண்ணைக்கையில், பாதம், பிஸ்தா, அக்ரூட் பருப்பு, வால்நட், பேரிட்சை பழம் , சூரியகாந்தி விதைகள், சியா விதைகள் இவற்றை தினம் ஒரு வேலை உணவுடன் எடுத்து கொள்ளலாம். இது காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாக இருப்பது நல்லது. இதில் அனைத்தும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இவற்றுடன் மிளகு தூள் உப்பு சேர்த்து சாப்பிடுவது மழைக்காலத்தின் ருசிக்க நல்ல இருக்கும்.
- மசாலா பொருள்கள் - மஞ்சள், சீரகம், வெந்தயம், இஞ்சி, பூண்டு, கிராம்பு, இலவங்கப்பட்டை, கறிவேப்பிலை, துளசி இலைகள் மற்றும் கருப்பு மிளகு போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து கொள்ளலாம். இது நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
- கற்பூர வள்ளி இலைகள் - இதில் பூஞ்சை தொற்றுநோய்களை எதிர்த்து போராடும் பண்புகள் உள்ளன. இந்த இலைகளை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக எடுத்து கொள்ளலாம்.. சிலர் இதை சாலடுகளில் சேர்த்து சாப்பிடுகின்றனர். இது கபத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. நுரையீரல் சம்பத்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் இதை கஷாயம் ஆக எடுத்து கொள்ளலாம். இந்த இலைகளை கொண்டு முகத்திற்கு ஆவி பிடித்தால், இது சைனஸ் தொந்தரவினால் முகத்தில் நீர் சேர்ந்து இருப்பதை குறைக்கும்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
ஜோதிடம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion