மேலும் அறிய

'மச்சி ஒரு டிரிப் போலமா?': ‛மேகம் கருக்கயிலே... புள்ள தேகம் குளிருதடி...’ பரளிக்காடு வாங்க..!

குடும்பத்தோடு இணைந்து இயற்கையை இரசிக்க ஒரு பயணம் செல்ல ஆசைப்படுகிறீர்களா?. உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ், பரளிக்காடு, பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா.

ஊர் சுற்றிகளுக்கு மனமும், நேரமும் இருந்தால் போதும், வண்டியை எங்கேனும் கிளப்பி விடுவார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் காடு, மலை என இரசிக்கலாம். ஆனால் குடும்பத்தினர் உடன் சுற்றுலா செல்வது சற்று சவாலானது. பாதுகாப்பும், செளரியங்களும் மிக முக்கியம். அப்படி வார விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் உடன் இணைந்து இயற்கையை இரசித்து, இன்புற பயணம் மேற்கொள்ள திட்டமிடுகிறீர்களா? உங்களுக்காகவே காத்திருக்கிறது, பரளிக்காடு, பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தளங்கள்.

மச்சி ஒரு டிரிப் போலமா?': ‛மேகம் கருக்கயிலே... புள்ள தேகம் குளிருதடி...’  பரளிக்காடு வாங்க..!

மேலும் படிக்க : மச்சி ஒரு டிரிப் போலமா? Part-5: ஊட்டிக்கு இந்த ரூட்டில் போயிருக்கீங்களா? இது வேற லெவல் ட்ரிப்!

’மச்சி ஒரு டிரிப் போலமா?’ பார்ட்-3: ‛நீலவானம்... நீயும். நானும்..’ நீலகிரி மலை இரயில் பயணம்

இயற்கை எழில்மிகு பரளிக்காடு

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இயற்கையின் ஏழில் மாறாமல் இருக்கும் மலைக் கிராமம், பரளிக்காடு. பலரும் அறியாத சூழல் சுற்றுலா தளமாக இப்பகுதி உள்ளது. பரிசல் பயணம், சுவையான உணவு, வனத்திற்குள் நடைபயணம், ஆற்றில் குளியல் என அட்டகாசமான பயண அனுபவத்தை பரளிக்காடு தருகிறது என்றால், குளுமையான சூழலில் இயற்கையோடு ஓய்வையும், புத்துணர்வையும் பூச்சமரத்தூர் தரும்.

மச்சி ஒரு டிரிப் போலமா?': ‛மேகம் கருக்கயிலே... புள்ள தேகம் குளிருதடி...’  பரளிக்காடு வாங்க..!

இதைக் கேட்டதும் மனம் அங்கு கிளம்ப தூண்டுகிறது அல்லவா?. அப்படித் தான் இவற்றை கேட்ட போது, எனக்கும் இருந்தது. ஆனால் உடனே கிளம்பி விடாதீர்கள். வார இறுதி நாட்களில் தான் சுற்றுலா பயணிகள் அனுமதி. இல்லையெனில் வார நாட்களில் மொத்தமாக 20 பேருக்கும் மேல் சேர்ந்து சென்றால், அனுமதி கிடைக்கும். ஆனால் ஒரு கண்டிசன். எதற்கும் ஒரு வாரத்திற்கு முன்பே வனத் துறையினரிடம் முன்பதிவு செய்ய வேண்டும். சரியான திட்டமிடலுடன் கிளம்புவது தான் சரியானது. பெரியவர்களுக்கு 550 ரூபாயும், குழந்தைளுக்கு 450 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மச்சி ஒரு டிரிப் போலமா?': ‛மேகம் கருக்கயிலே... புள்ள தேகம் குளிருதடி...’  பரளிக்காடு வாங்க..!

அப்படியாக நானும் முன்பதிவு செய்து வார இறுதி நாட்களுக்காக காத்திருந்து, நண்பர்களுடன் கிளம்பினேன். கோவை நகரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குள் செல்ல வேண்டி இருந்ததால், கோவையில் இருந்து அதிகாலையில் வண்டியை கிளப்பினோம். கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் பயணித்து, காரமடையில் இருந்து இடதுபுறமாக பில்லூர் அணை சாலையில் திரும்பினோம். பசுமை போர்த்திய கிராமங்களையும், மலைகளையும், காடுகளையும் கடந்து இலக்கை அடைந்தோம். வழியெங்கும் இயற்கை வளங்கள் குவிந்து கிடந்தன. கொஞ்சும் இயற்கை எழில் சூழ, மலையேறி செல்வது சுகமான அனுபவமாக இருந்தது. 

மச்சி ஒரு டிரிப் போலமா?': ‛மேகம் கருக்கயிலே... புள்ள தேகம் குளிருதடி...’  பரளிக்காடு வாங்க..!

மேலும் படிக்க : ’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2: இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்

மச்சி ஒரு டிரிப் போலாமா?: தூவானம்... வனமே வானம்... 'சின்ன சிரபுஞ்சி' சின்னக்கல்லார் பயணம்!

தித்திக்கும் பரிசல் பயணம்

நீலகிரியில் உற்பத்தியாகி கேரளாவில் சென்று மீண்டும், தமிழ்நாட்டிற்குள் பாயும் பவானி நதியின் குறுக்கே கட்டப்பட்ட பில்லூர் அணையின் பின்பகுதியில் இக்கிராமம் உள்ளது. பரளிக்காடு எங்களை வரவேற்றது. ஆறும், ஆற்றங்கரையோர ஆலமரங்களும் அசைந்து கொண்டிருந்தன. ஆலமர விழுதுகளிலும், ஊஞ்சலிலும் சிலர் ஆடிக் கொண்டிருந்தனர். சுற்றிலும் மலைகளும், மரங்களும் சூழ்ந்திருக்க நடுவே ஓடும் ஆறு என இயற்கை ஓவியமாக காட்சியளித்தது. சிலர் மரத்தடியில் அமர்ந்து இயற்கையோடு உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு நாங்களும் சேர்ந்து கொண்டோம். இதமான சூழலில் கொடுக்கப்பட்ட சூடான சுக்கு காப்பியை பருகுவது தனிச் சுவையாக இருந்தது.

மச்சி ஒரு டிரிப் போலமா?': ‛மேகம் கருக்கயிலே... புள்ள தேகம் குளிருதடி...’  பரளிக்காடு வாங்க..!

பரிசல் பயணம் துவங்கியது. 20 பரிசல்கள் இருக்கும். ஒரு பரிசலுக்கு 4 பேர் வீதம் லைப் ஜாக்கெட் அணிவிக்கப்பட்டு, பரிசலில் ஏற்றப்பட்டனர். பரிசல்களில் உள்ளூர் பழங்குடிகள் துடுப்பை போட, பரிசல் ஆற்றில் மிதந்து சென்றது. இயற்கையோடு சேர்ந்து மனம் பரிசலில் சென்றது. தூரத்தில் பில்லூர் அணை தென்பட்டது. சுற்றிலும் பசுமை சூழ்ந்திருந்தது. பல பறவைகளின் சத்தங்கள் செவிகளுக்கு இனிமையூட்டின.

இந்த சூழல் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் பழங்குடிகளுக்கே செலவிடப்படுவதாகவும், இது பல பழங்குடிகளுக்கு வாழ்வாதாரமாக இருப்பதாக அவர்களின் பேச்சின் ஊடாக அறிந்து கொள்ள முடிந்தது. 'யானை எல்லாம் வருமா?' என பரிசலோட்டியே கேட்ட போது, 'அப்பப்ப வரும்' என்றார். 'உங்களுக்கு யானைகளை கண்டு பயமில்லையா?' என்றேன். 

மச்சி ஒரு டிரிப் போலமா?': ‛மேகம் கருக்கயிலே... புள்ள தேகம் குளிருதடி...’  பரளிக்காடு வாங்க..!

'எங்களுக்கு அதுகள தெரியும். அதுகளுக்கு எங்கள தெரியும்' என்றபடி துடுப்பை போட்டார். அந்த வார்த்தைகள் அர்த்தமிகுந்ததாக இருந்தது. இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடிகளின் வாழ்வியலை சொல்வதாக இருந்தது. அப்படியே காட்டிற்குள் சிறிய நடை பயின்று வர, மதிய உணவு தயாராக இருந்தது.

சுவையான உணவிற்கு பின்னர் அத்திக்கடவு பாலத்தில் இருந்து ஆற்றங்கரையோரத்தில் நடைபயணம் துவங்கியது. பவானி நதி சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. பல விதமான பறவைகளின் சத்தங்களும், பூச்சிகளின் ரீங்காரமும் காட்டை இசைத்தன. நீண்ட அலகை கொண்ட இருவாச்சி பறவை ஒன்று தலைக்கு மேலே பறந்து சென்றது. அதன் அழகு மனதை கொள்ளை கொண்டது. இயற்கையோடு நடந்து ஆற்றில் ஒரு ஆனந்த குளியலோடு பரளிக்காடு பயணம் முடிந்தது.

அசர வைத்த பூச்சமரத்தூர் 

மச்சி ஒரு டிரிப் போலமா?': ‛மேகம் கருக்கயிலே... புள்ள தேகம் குளிருதடி...’  பரளிக்காடு வாங்க..!

அத்திக்கடவு பாலத்திற்கு முன்பு இடது புறம் செல்லும் சாலையில் பயணித்தோம். ஆள் அரவற்ற சாலை வனத்திற்கு ஊடாக சென்றது. பரளிக்காடுவிற்கு நேர் மேலே இருக்கிறது, பூச்சமரத்தூர் தங்கும் விடுதிகள். இது சுற்றுலா பயணிகளுக்காகவே அமைக்கப்பட்டுள்ளது. இதற்க வனத்துறையினரிடம் தனியாக கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்வது கட்டாயம். எதிர்பார்த்ததை காட்டிலும் அசத்தலாக இருந்தது, தங்குமிடங்கள்.

மச்சி ஒரு டிரிப் போலமா?': ‛மேகம் கருக்கயிலே... புள்ள தேகம் குளிருதடி...’  பரளிக்காடு வாங்க..!

இயற்கையான சூழலில் இரம்மியமான இடம். தங்குமிடத்தை சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருந்தது. மலைகளின் மீது வெண்மேகங்கள் தவழ்ந்து கொண்டிருந்தன. பச்சை நிற வண்ணம் பூசிய தங்குமிடங்கள். போட்டோ எடுக்க அங்காங்கே மான், காட்டு மாடு கொம்புகளும், எலும்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. கண்ணுக்கு எட்டிய தொலைவில் பில்லூர் அணை. மாலை நேரமாக ஆக இயற்கையின் பேரழகில் சொக்கிப் போனேன். இரவு வந்தது. இதமான குளிரும் வந்தது. இரவு உணவு முடித்த போது, தூரத்தில் எங்கோ யானை சத்தம் ஓங்கி அடங்கியது. அதன் பின் அமைதியான காட்டை, பழங்குடிகளின் இசையும், பாடல் சத்தமும் அதிர வைத்தது. அவர்களைத் தேடி போக மனதில் ஆசை வந்தாலும், இரவும், வன விலங்கு அச்சமும் அறைக்குள் முடக்கிப்போட்டது. 

மச்சி ஒரு டிரிப் போலமா?': ‛மேகம் கருக்கயிலே... புள்ள தேகம் குளிருதடி...’  பரளிக்காடு வாங்க..!

மறுநாள் விடியல் இருவாட்சிகளின் சத்தங்களை கேட்டபடி விடிந்தது. ஆற்றை நோக்கி  நடை பயணம் சென்றேன். இயற்கையின் அழகு வேறொரு பரிணாமத்தில் காட்சியளித்தது. இயற்கை கண்களுக்கும், மனதிற்கும் விருந்து படைத்தது. 

நீங்களும் ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். இனிமையான பயண அனுபவமாக இருக்கக்கூடும்.

(பயணங்கள் முடிவதில்லை)

மேலும் படிக்க : ’மச்சி ஒரு டிரிப் போலமா?’ : மனதை கொள்ளை கொள்ளும் ‛கொள்ளேகால்’ பயண அனுபவம்!

'மச்சி ஒரு டிரிப் போலமா?' ( பகுதி - 6) - ஆலப்புழாவில், மிதக்கும் படகு வீட்டு பயணம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget