Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Palamedu Jallikattu 2026 LIVE: பாலமேட்டில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற ஜல்லிகட்டுப் போட்டி 1000 காளைகளும், 800 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளன. இதன் நேரலையை நாம் காணலாம்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிகட்டுப் போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை வந்தாலே அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டியைக் காண உள்ளூர் முதல் உலகம் வரையிலான மக்கள் வருகை தருவார்கள். இப்படியான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்ததை தொடர்ந்து இன்று பாலமேட்டில் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு மேல் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் முதலில் ஊர் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சூரி ஆகியோர் பங்கேற்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு கார், டிராக்டர், பைக், தங்க நாணயம், கட்டில், பீரோ, மெத்தை, சைக்கிள், அண்டா உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகளும், 800 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். 12 சுற்றுகள் வரை இந்த போட்டிகள் நடைபெறுகிறது.






















