மேலும் அறிய
Advertisement
Amazon pink river dolphins: அமேசான் ஆற்றில் பிங்க் கலர் டால்பின்கள்.. இந்த டால்ஃபின்களை பத்தின அதிசயம் இவ்வளவா?
இவை மிகப்பெரிய இனங்கள் ஆனாலும் இந்த இனத்தில் ஆண் டால்ஃபின்கள்தான் அதிகம் என கூறப்படுகிறது.
இளஞ்சிவப்பு டால்ஃபின்கள் :
அமேசான் நதியில் வாழும் இளஞ்சிவப்பு டால்ஃபின்கள் டால்பின் போடோ அல்லது பிங்க் நதி டால்பின் என அழைக்கப்படுகிறது. இந்த இளஞ்சிவப்பு நதி டால்பின்கள் முதலில் சாம்பல் நிறத்தில் பிறக்கின்றன.பின்னர் வயதாக வயதாக அவற்றின் நிறம் இளஞ்சிவப்பு நிறமாக மாறும். இது கடல் டால்பின்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. இவை பல் திமிங்கலங்களின் இனத்தின் கீழ் வருகிறது. பெரும்பாலும் அமேசான் படுகையில் மற்றும் அதன் துணை நதிகளில் காணப்படுகின்றன , இவை மிகப்பெரிய இனங்கள் ஆனாலும் இந்த இனத்தில் ஆண் டால்ஃபின்கள்தான் அதிகம் என கூறப்படுகிறது. இந்த டால்ஃபின்களின் தன்மை மற்றும் குணங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
View this post on Instagram
பிங் டால்ஃபின் பற்றி தெரிந்துக்கொள்வோம்!
- இவ்வகை டால்பின்கள் சராசரியாக சுமார் 185 கிலோகிராம் எடை மற்றும் 2.5 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்.
அதன் அலகுகள் மிக நீண்டதாக இருக்கும் . அவை இரையைப் பிடிக்க உதவுகின்றன.- இவ்வகை டால்பின்கள் மீன்கள், நண்டுகள், இறால், பாம்புகள், ஆமைகள் மற்றும் பிற கடல் விலங்குகள் என கிட்டத்தட்ட 53 வகையான உயினங்களை இரையாக்கூடியது.
- இந்த இளஞ்சிவப்பு டால்பின்கள் இணைக்கப்படாத கழுத்து முதுகெலும்புகளைக் கொண்டுள்ளன, அவை எந்த திசையிலும் சுழலும். நீருக்கடியில் எல்லா திசைகளிலும் பார்க்க இது அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.
- விலங்குகளைப் போலவே, இந்த நதி டால்பின்களும் கண்களைத் திறந்து தூங்கும்.
- இவ்வகை டால்பின்கள் உப்பு நீரில் உயிர்வாழாது . எனவே உப்பு நீரில் இருந்து வெகு தொலைவில் புதிய நீரில் வாழ விரும்பும்.பெரும்பாலும் தனிமையில் வாழ விரும்பும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
- பிங் டால்பின்கள் பருத்த உடல்கள், குண்டான நெற்றிகள், ஒல்லியான மூக்குகள், குண்டான கன்னங்கள் மற்றும் சிறிய கண்கள் என முற்றிலும் கடல் டால்பின்களில் இருந்து மாறுபட்டவை.
- பாலூட்டி வகையை சேர்ந்த இந்த பிங் டால்பின்களின் சராசரி ஆயுட்காலம் 33 மாதங்கள் ஆகும்.
- பொலிவியா, பிரேசில், கொலம்பியா, பெரு மற்றும் பிற நாடுகளில் இந்த இளஞ்சிவப்பு டால்பின்களை காணலாம்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion