Summer Tips: கொளுத்தும் வெயில்! இந்த மசாலா பொருட்களை அளவோடு சாப்பிடுங்க!
Summer Tips: கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதை காணலாம்.
சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா பொருட்கள் உணவின் சுவைக்கா மட்டுமல்ல, அதோடு உடல்நலனிலும் தொடர்புள்ளது. இருப்பிலுன், ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்றவாறு அதை அளவோடு சாப்பிட வேண்டும். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவினாலும், அவை அனைத்தும் கோடை காலத்திற்கு ஏற்றவை அல்ல. சிலருக்கு இது குடல் செயல்பாட்டை பாதிக்கலாம். அப்படியான மசாலா பொருட்களை கோடை காலத்தில் தவிர்த்துவிடுவது நல்லது.
கோடை காலத்திலும் செரிமான மண்டலத்தை சீராக வைத்துகொள்ள சில மாசாலா பொருட்களை மிதமான அளவில் உணவில் சேர்த்துகிள்ள வேண்டும். இஞ்சி உடலில் வெப்பநிலையை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது; குளிர்காலத்தில் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை தூண்டுகிறது. இதை கோடை காலத்தில் அதிகமாக எடுத்துகொள்ள கூடாது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதேபோல பலவற்றை நிபுணர்கள் பரிந்துரைப்பதை காணலாம்.
கோடை காலத்தில் மிதமான அளவில் இவற்றை பயன்படுத்தினால் போதுமானது.
இஞ்சி:
இது ஆயுர்வேத மருத்துவத்தில் மிகவும் சிறந்த மருந்தாக சொல்லப்படுகிறது. ஆனால், இதை அதிகமாக பயன்படுத்தினால், அது உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்யலாம். இதற்கு பதிலாக சுக்கு பயன்படுத்தலாம். சமையலில் மட்டும் கொஞ்சமாக இஞ்சி பயன்படுத்தலாம்.
பெருங்காயம்:
இந்திய சமையலில் தவறாமல் இடம்பெறும் ஒன்று பெருங்காயம். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிக்க உதவுகிறது. இதையும் வெயில் காலத்தில் அதிகமாக பயன்படுத்த கூடாது.
மிளகாய்:
இந்திய சமையலில் பச்சை, சிவப்பு, குடைமிளகாய் உள்ளிட்ட பல வகையான மிளகாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உள்ள காப்சிகன் (capsaicin) என்ற பொருள் எரிச்சலை உண்டாக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கோடை வெயில் அதிகரிக்கும் என்பதால் குறைவாக பயன்படுத்த வேண்டும். சிலருக்கு எரிச்சலை உண்டாக்குமானல் உணவில் மிளகாய் சேர்ப்பதை தவிர்க்கலாம். இது குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
கிராம்பு:
கிராம்பு செரிமான நலனுக்கு உகந்ததாக இருந்தாலும். இயல்பாகவே சூட்டு உடல்வாகு கொண்டவர்கள் கோடையில் கிராம்பு சாப்பிடுவதையும் உணவில் சேர்ப்பதையும் தவிர்க்கலாம்.
பூண்டு:
வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில் உணவில் பூண்டையும் அளவோடு சாப்பிடுவது நல்லது. அதிகமாக சாப்பிட்டால் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
கோடை காலத்தில் உடலை அதிகம் வெப்பம் அடைய செய்யாமல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடிய மசாலாப் பொருட்களை ஊட்டச்சத்து நிபுணர்கள் பகிந்துள்ளனர். சீரகம், புதினா, வெந்தயம், , ஏலக்காய், இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், கொத்தமல்லி, சின்ன வெங்காயம், கருப்பு மிளகு போன்றவற்றையும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.