மேலும் அறிய

நம் வீட்டு ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாத பொருட்கள் என்னென்ன தெரியுமா?

எந்தப் பொருள்களை, எத்தனை நாள்கள் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும், என்பதை அறியாமல், அந்தப் பொருளையும் கெடுத்து, அதன் மூலம் நம் உடல்நலனையும் கெடுத்துக்கொள்கிறோம்.

நாம் பல்பொருள் அங்காடியில் வாங்கும் பல பொருள்களை நாள்பட உபயோகிக்க என்று ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கிறோம். ஆனால், எந்தப் பொருள்களை வைக்க வேண்டும், எத்தனை நாள்கள் வரை வைத்திருக்கலாம் என்பதை அறியாமல், அந்தப் பொருளையும் கெடுத்து, அதன் மூலம் நம் உடல்நலனையும் கெடுத்துக்கொள்கிறோம். நம் வீட்டு ஃபிரிட்ஜில் வைக்கவே வைக்கக் கூடாத பழங்கள், காய்கறிகள், உணவுகள் பட்டியல் இங்கே…

தக்காளி: அதிகக் குளிர் தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கக்கூடியது. காற்றுப்புகக்கூடிய சாதாரணச் சூழலிலேயே தக்காளி சில நாள் வரை கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைக்கும் தக்காளி பழுப்பதே இல்லை. எனவே, தக்காளியின் சுவையை அதிகம் பெற ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். 

வாழைப்பழம்: ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாதது வாழைப்பழம். ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் அதிகப்படியான குளிரும் இருளும் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுப்பதோடு, அழுகவும் செய்துவிடும். திறந்த, உலர்ந்த இடங்களில் வாழைப்பழத்தை வைத்திருப்பதே நல்லது.

அவகேடோ: அவகேடோ பழத்தையும் ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது. கடைகளில் வாங்கும்போது பழுக்காத நிலையில் இருக்கும் இந்தப் பழம், ஃபிரிட்ஜில் வைத்தால், பழுக்கவே பழுக்காது. மேலும், அதன் சுவையும் மாறிவிடக்கூடும்.

தர்பூசணி: நீர்ச்சத்து மிக்க காய்கறிகளையும் பழங்களையும்கூட ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஃபிரிட்ஜில் வைக்கப்படும் இந்த வகை காய்கனிகள் குளிரால் உடைந்து குழைந்துவிடும். ஆனால், இவ்வகை காய்கனிகளை நறுக்கி, நான்கு அல்லது ஐந்து நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம்.

கத்திரிக்காய்: கத்திரிக்காய் வெப்பநிலை உணர்திறன் கொண்ட காய்கறிகள் ஆகும், மேலும் குளிர்சாதன பெட்டியில் நீண்ட காலம் இருந்தால் கெட்டுப்போகும். 10 ° C க்கும் குறைவான வெப்பநிலை கத்தரிக்காயின் அமைப்பையும், சுவையையும் சேதப்படுத்தும். அவை அறை வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும்.

நம் வீட்டு ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாத பொருட்கள் என்னென்ன தெரியுமா?

தேன்: இயற்கையிலேயே கெட்டுப்போகாத தன்மை கொண்ட தேனும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத ஒரு பொருள்தான். சாதாரண தட்பவெப்பநிலையில் இறுக மூடி வைத்தாலே தேன் அதன் சத்துக்களை பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடியது. ஆனால், ஃபிரிட்ஜில் குளிர்ந்த சூழலில் வைத்திருக்கும்போது அது தனது நிலையை மாற்றிக்கொண்டு, மணல்போலக் கடினமாகவும், சுவை மாறியும் போய்விடும். ஏறக்குறைய உபயோகிக்க முடியாத அளவுக்கு தேன் மாறிவிடும்.

பூண்டு: `காயக் காயத்தான் பூண்டின் சுவை கூடும்’ என்பார்கள். அதனால் திறந்தவெளியில் பூண்டை வைத்திருப்பதே நல்லது. ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டால், பூண்டின் சுவை கெட்டு, அதன் நீண்டகால பலனும் பாதிக்கப்படும்.

சாக்லெட்: ஃப்ரிட்ஜில் வைத்த பிறகு, சாக்லேட்டில் வெள்ளைப் படலத்தைப் பார்த்தால், அது அச்சு என்று நம்பவேண்டாம், சாக்லேட்டில் இயற்கையாகவே கொழுப்பு உள்ளது! எனவே அது நமது ஆரோக்கியத்திற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது, ஆனால் அதன் ஒரிஜினல் பரிமாணத்தை இழக்கும்போது உடல்நலத்திற்கு தீங்காகிறது. ஒளிக்கதிர்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட உலர்ந்த இடத்தில் ஒரு சிறிய மறைவிடத்தை ஒதுக்குவது சிறந்தது.

உருளைக்கிழங்கு: மண்ணில் விளைந்து, ஈரம் போகக் காய்ந்து நம்மிடையே வரும் உருளைக்கிழங்கு காய்ந்து இருப்பதே நல்லது. இது, ஈரத்தில் முளைத்துவிடும் தன்மை கொண்டது. சாதாரணச் சூழலில் பேப்பர் பைகளில் சுற்றிவைப்பதே உருளைக்கு நல்லது. பிளாஸ்டிக் பைகளில் சுற்றிவைத்தால், உருளைக்கிழங்கின் ஈரப்பதத்தால் சீக்கிரமே கெட்டுவிடும் ஆபத்து உண்டு.

முலாம்பழம்: கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த முலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம்பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய முலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

நம் வீட்டு ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாத பொருட்கள் என்னென்ன தெரியுமா?

துளசி: அதேபோல் துளசி , ரோஸ்மெரி அல்லது மற்ற எந்த மூலிகை இலைகளையும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைக்கும் பட்சத்தில் அதன் மருத்துவகுணம் போய் , பயன்படுத்தினாலும், உபயோகம் இல்லாததாக மாறிவிடும். தேவைப்பட்டால் துணியில் சுற்றி ஒரு டப்பாவில் வைக்கலாம்.

வெங்காயம்: ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாதது வெங்காயம். குளிரில் தானும் கெட்டு ஃபிரிட்ஜையும் கெட்ட நாற்றம் உள்ளதாக மாற்றிவிடும். மேலும், ஃபிரிட்ஜில் இருக்கும் எல்லா உணவுகளையும் வெங்காய மணம் மணக்கும்படி மாற்றிவிடும். உலர்ந்த சூழலே வெங்காயத்துக்கு ஏற்றது. பேப்பர் பைகளில் வெங்காயத்தைப் போட்டு வைத்திருப்பதே போதுமானது. அதிக வெப்பமில்லாத இருண்ட சூழலில், வெங்காயத்தை வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் உருளைக்கிழங்குக்கு அருகே வைக்கக்கூடாது. உருளைக்கிழங்கில் இருந்து வெளியாகும் வாயுவும் ஈரப்பதமும் வெங்காயத்தை அழுகச் செய்துவிடும்.

முட்டை: முட்டைய பிரிட்ஜில் வைப்பது முற்றிலும் தவறு. ஏனேன்றால் முட்டையின் மேல் பாக்டேரியாக்கள் இருக்ககூடும். இவற்றை பிரிட்ஜில் வைப்பதன் மூலாம் பாக்டேரியாக்கள் வாழ்வதற்க்கான சூழலை நாமே உருவாக்கி கொடுப்பது போல் ஆகிவிடும்

ஸ்ட்ராபெரி: குளிர்ச்சியுடன் தொடர்பு கொண்டால், ஸ்ட்ராபெர்ரிகள் தங்கள் சர்க்கரையை இழந்து, ஒரு பேஸ்டி அமைப்பைப் பெறுகின்றன. அவற்றை திறந்த வெளியில் மற்றும் நேரடி சூரிய ஒளியில் சேமிக்கவும். அவற்றை விரைவாக சாப்பிட வாங்குவதே சிறந்தது.

கருப்பு பழங்கள்: ப்ளம், பீச், ஆஃப்ரிகாட், நெக்டாரின் போன்ற மேல்நாட்டு ஸ்டோன் வகைப் பழங்களுக்கும் ஃபிரிட்ஜ் ஒத்து வராது. வாங்கும்போது அதிகம் பழுக்காதநிலையில் இருக்கும் இவற்றுக்கு சாதாரணச் சூழல்தான் ஏற்றது. குளிரில் வைத்திருந்தால் அதிகம் பழுக்காது; சுவை கூடாமல் போய்விடும்.

நம் வீட்டு ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாத பொருட்கள் என்னென்ன தெரியுமா?

வெள்ளரி: அதன் தோல் குளிர்ச்சியை விரும்பாது, அதிக வேகத்தில் வாடிவிடும். அதை சாப்பிட தொடங்கும் வரை, அதை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம். அதைத் தொடங்கியவுடன், பாதியை வைத்தால் அதன் மொறுமொறுப்பைப் பாதுகாக்க பிரிட்ஜின் கீழ் பகுதியில் வைக்கலாம்.

காபி: காபி தூள் அல்லது காபி கொட்டை இவற்றை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. காற்று புகாத பாட்டிலில் வைத்திருந்தாலே போதுமானது. ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் ஈரப்பதம் காபித் தூளை பாதித்து, கெட்டுப்போகச் செய்துவிடும்

ப்ரெட்: பிரெட் போன்ற பேக்கரி பொருள்களும் ஃபிரிட்ஜுக்கு ஆகவே ஆகாதவை. சாதாரண தட்பவெப்பத்தில் சுவையும் மெதுவான தன்மையும் அதிகம் கொண்ட பிரெட், அதிகமான குளிரில் விறைத்துப் போய்விடும். இதனால் சுவையும் கெட்டு, கெட்டித்துவிடும். ஆகவே இருளான, அதிக வெப்பமில்லாத சமையலறை அலமாரிகளிலேயே டிபன் பாக்ஸ்களில் மூடிவைத்தே பிரெட்டைப் பாதுகாத்துவைக்கலாம்.

பீனட் பட்டர்: பீனட் பட்டர் அறை வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும். குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தால் அது உலர்ந்ததாகவும் கடினமாகவும் மாறும். கிரீமி, பரவக்கூடிய பீனட் பட்டருக்கு, அதை இருண்ட, உலர்ந்த இடத்தில் சேமித்து வைப்பது நல்லது. 

கெட்ச்சப்: கெட்ச்சப் எனும் சுவையூட்டும் கூழ்கள் தற்போது எல்லா வீட்டிலும் காணப்படுகின்றன. இனிப்பு, புளிப்பு மற்றும் காரச் சுவைகளில் வரும் இந்த வகை கெட்ச்சப்-ஐ ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஒரு மாதம் வரை சாதாரணச் சூழலிலேயே கெடாமல் இருக்கக் கூடியது கெட்ச்சப். ஃபிரிட்ஜில் வைத்தால், இறுகிவிடும்.

ஆரஞ்சு: ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களும் ஃபிரிட்ஜில் வைக்கத் தோதானவை அல்ல. சாதாரண வெப்பநிலையே இந்தப் பழங்களைப் பழுக்கச் செய்துவிடும். அதிகக் குளிரான சூழல், இந்தப் பழங்களின் சிட்ரஸ் அமிலத்தை பாதித்து, சுவையை மாற்றிவிடும். மேலும், அதன் தோலை பாதித்து பளபளப்பையும் மங்கச் செய்துவிடும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan: விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்... தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்
செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்... தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
TN Roundup: உருவாகிறது புதிய புயல், தவெகவில் செங்கோட்டையன், தங்கம் விலை  - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: உருவாகிறது புதிய புயல், தவெகவில் செங்கோட்டையன், தங்கம் விலை - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK
தவெகவில் செங்கோட்டையன்?விஜய் வழங்கும் முக்கிய பதவி!OPERATION கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan: விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்... தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்
செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்... தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
TN Roundup: உருவாகிறது புதிய புயல், தவெகவில் செங்கோட்டையன், தங்கம் விலை  - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: உருவாகிறது புதிய புயல், தவெகவில் செங்கோட்டையன், தங்கம் விலை - தமிழகத்தில் இதுவரை
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பருக்கு ரூ.1.17 கோடி.. அப்படி என்ன இருக்கு அதுல? 45 போட்டியாளர்கள், இந்தியாவே ஷாக்
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பருக்கு ரூ.1.17 கோடி.. அப்படி என்ன இருக்கு அதுல? 45 போட்டியாளர்கள், இந்தியாவே ஷாக்
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Embed widget