ICF அப்ரன்டிஸாக வேண்டுமா? தேர்வு இல்லை...10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!
எந்தவித எழுத்துத்தேர்வும் இல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே இரயில் பெட்டி இணைப்புத்தொழிற்சாலை அப்ரன்டிஸ்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![ICF அப்ரன்டிஸாக வேண்டுமா? தேர்வு இல்லை...10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! Want to be an Apprentice in ICF? 10th students should apply soon ICF அப்ரன்டிஸாக வேண்டுமா? தேர்வு இல்லை...10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/29/530a1cf43ad17824c11602613a82eb63_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இரயில் பெட்டி இணைப்புத்தொழிற்சாலை எனப்படும் ICF ல் 782 தொழில்பழகுநர் பதவிக்கான காலிப்பணியிட அறிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இரயில்பெட்டி இணைப்புத்தொழிற்சாலை எனப்படும் Integral coach factory (icf) ல் கடந்த 1955 ஆம் ஆண்டு முதல் சுவிஸ் தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தப்பட்ட இந்திய இரயில்வே துறையின் முதன்மை தொழிற்சாலையாகும். சுமார் 511 ஏக்கர் பரப்பளவில் இரயில் பயணிகளுக்கான ரயில்பெட்டிகளை உற்பத்திச் செய்வதில் முதன்மையாக விளங்கி வருகிறது. இங்கு சுமார் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பணியாற்றிவரக்கூடிய நிலையில் அவ்வப்போது தொழில்பழகுநர் ஆவதற்கான வாய்ப்பு அறிவிக்கப்படும். அதன்படி தற்போது 2021 ஆம் ஆண்டிற்கான 782 அப்ரன்டிஸ் ஆவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் அப்ரண்டிஸ் (முன்னாள் ஐடிஐ)-582 பணியிடங்களும், புதிய பயிற்சியாளர்களுக்கு 200 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தவித வித எழுத்துத்தேர்வும் இல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனக்கூறப்பட்டுள்ள நிலையில்,வேறு என்னென்ன தகுதிகள்? உள்ளது என தெரிந்துக்கொள்வோம்.
கல்வித் தகுதி: இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் தொழில்பழகுநராக வேண்டும் எனில் அதற்கு அதிகப்பட்ச கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு ஐடிஐ படித்திருப்பது கட்டாயம்.
IFC ல் அப்ரன்டிஸ் ஆவதற்கானத் தகுதிகள் :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்களுக்கு அக்டோபர் 26,2021 தேதியின் படி 15 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஒபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு 27 வயதும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பக்கட்டணம்:
மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில் முதலில் https://pb.icf.gov.in/act/ என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
உங்களது விண்ணப்பங்களை மூன்று படிநிலைகளில் விண்ணப்பிக்க வேண்டும் என்று காண்பிக்கும். முதலில் உங்களது சுய விபரங்கள், கல்வித்தகுதி போன்றவற்றை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து விண்ணப்பதார்களுக்கான கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.பின்னர் உங்களது விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அப்ரன்டிஸ் பணிக்கும் பொதுப்பிரிவினருக்கு ரூபாய் 100 விண்ணப்பக்கட்டணமாகவும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு கட்டணச்சலுகையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
IFC ல் பணிக்கான தேர்வு முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் அவர்களின் கல்வித்தகுதி மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இதுக்குறித்தக் கூடுதல் தகவல்களை https://icf.indianrailways.gov.in/ என்ற இணையப்பக்கத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)