மேலும் அறிய

Job Alert: தகுதித் தேர்வுகள் இல்லை; ரூ.50,000 ஊதியம்: மாவட்ட வேலைவாய்ப்பு - முழு விவரம்!

Job Alert:

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

அலுவலக உதவியாளர் 

ஈப்பு ஓட்டுநர்

இரவு காவலர்

கல்வித் தகுதி

அலுவலக உதவியாளர் பணிக்கு எழுத  படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். 

ஈப்பு ஓட்டுநர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். 

இரவு காவலர் பணிக்கு விண்னப்பிக்க எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். 

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஊதிய விவரம்

  • அலுவலக உதவியாளர் - ரூ.15,700- ரூ.50,000/-
  • ஈப்பு ஓட்டுநர் - ரூ.19,500 - ரூ.62,000/-
  • வயது வரம்பு விவரம்

விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

ஆணையாளர்,

ஊராட்சி ஒன்றியம்,

விருதுகர்

விண்ணப்பிக்க கடைசி தேதி 29.12.2023

இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/12/2023121136.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

இரவு காவலர் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 

ஆணையாளர்,

ஊராட்சி ஒன்றியம், 

திருச்சுழி

இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் - 19.12.2023

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை 

பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள 'Circle Based Officers' அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (12.12.2023) கடைசி தேதி. 

பணி விவரம்

Circle Based Officers

மொத்த பணியிடங்கள் - 5280

தமிழ்நாடு, பாண்டிச்சேரி வட்டத்தில் மட்டும் 125 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

குஜராத், ஆந்திரபிரதேசம், கர்நாடகா, லடாக், தமிழ்நாடு,புதுச்சேரி, தெலங்கானா, மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மிசோரம், திரிபுரா, பீகார், கேரளா, ஜெய்பூர், புதுடெல்லி, லக்னோ, கொல்கத்தா, மும்பை, சண்டிகர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கி கிளைகளில் இந்த வேலைவாய்ப்பின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி மற்றும் தகுதிகள்

இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவம், பொறியியல், பட்ட கணக்கர், Cost Accountant ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 30.10.2024 முதல் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை:

இதற்கு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கு 6 மாதம் Probation காலம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்

Job Alert: தகுதித் தேர்வுகள் இல்லை; ரூ.50,000 ஊதியம்: மாவட்ட வேலைவாய்ப்பு - முழு விவரம்!

விண்ணப்ப கட்டணம்

Job Alert: தகுதித் தேர்வுகள் இல்லை; ரூ.50,000 ஊதியம்: மாவட்ட வேலைவாய்ப்பு - முழு விவரம்!

ஊதிய விவரம்

( ரூ.36000-1490/7-46430-1740/2- 49910-1990/7-63840 applicable to Junior Management Grade Scale-I plus )

விண்ணப்பிப்பது எப்படி?

பாரத ஸ்டேட் வங்கியின் இணையதள முகவரியான https://sbi.co.in/ அல்லது
https://www.sbi.co.in/web/careers/current-openings - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

இது தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள - 022-22820427 ( 11:00 AM and 05:00 PM வங்கி வேலைநாட்களில்) மின்னஞ்சல் முகவரி - http://cgrs.ibps.in

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://sbi.co.in/documents/77530/36548767/212223-Final+Advertisement.pdf/3a3945e6-d8ee-fc51-8992-99d0ff942541?t=1700564748917 - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.12.2023

ஆன்லைன் தேர்வு நடைபெறும் உத்தேசிக்கப்பட்ட தேதி - ஜனவரி 2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget