TNPSC : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 761 காலி பணியிடங்கள் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?...
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு, நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது
பதவியின் பெயர்: சாலை ஆய்வாளர்.
காலி இடங்கள்: 761
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.02.2023
இணையதளம் மூலம் விண்ப்பத்தை திருத்தம் மேற்கொள்வதற்கான காலம்: 11.02.2023
தேர்வு நடைபெறும் நாள்
மே மாதம் 7ஆம் தேதி;
முதல் தாள் - முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி வரை
இரண்டாம் தாள் -பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை
ஊதிய விவரம்
ரூ.19,500 – ரூ.71,900 வரை
கூடுதல் தகவல்களுக்கு:
தமிழ் மொழியில் அறிக்கை: https://www.tnpsc.gov.in/Document/tamil/02_2023_RI_TAM.pdf
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். TNPSC - Tamil Nadu Public Service CommissionPSC - Tamil Nadu Public Service Commission
- பின்னர் Apply Online என்பதை கிளிக் செய்யவும். இதற்கு முன்பு OTR பதிவு செய்திருக்க வேண்டும்.
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பின் விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும் செய்யவும்.
- அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்
- பின்னர் சாலை பதிவாளர் பதவிக்கு நேராக உள்ள Apply Now என்பதை கிளிக் செய்யவும்
- புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
- சமர்பித்த விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளவும்.
மேலும் கூடுதல் மற்றும் அதிகாரப்பூரவ தகவலுக்கு, அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான உறுதியான தகவல்களாகும். 02_2023_RI_TAM.pdf (tnpsc.gov.in)
Also Read: LIC Apprenticeship: மாதம் ரூ.50 ஆயிரம் வரை ஊக்கத்தொகை; காப்பீட்டு நிறுவனத்தில் வேலை- முழு விவரம்!.,.