Job Alert: நர்சிங் படிப்பு படித்துள்ளீர்களா? ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை - அப்ளை செய்வது எப்படி?
செவிலியர் வேலைவாய்ப்பு குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை கீழ் செயல்படும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையம் போன்றவற்றில் உள்ள செவிலியர் காலிப் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம் :
செவிலியர்
மொத்த பணியிடங்கள் : 37
கல்வித் தகுதி:
செவிலியர் பட்டயபடிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பி.எஸ்.சி. நர்ஸிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர்ம் மற்றும் தாதியம் குழுமத்தின் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் (Integrated curriculum registered under TN nursing council) கீழ் உள்ள படிப்பு படித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
ரூ.18,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை 37 பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
எப்படி விண்ணப்பிக்கலாம்:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://theni.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், அதில் கேட்கப்பட்டுள்ளவற்றை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன்தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-177
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 03.05.2023 மாலை 5 மணி வரை
அறிவிப்பின் விவரம் அறிய : - https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2023/01/2023011863.pdf
மேலும் வாசிக்க..
LIC Apprenticeship: மாதம் ரூ.50 ஆயிரம் வரை ஊக்கத்தொகை; காப்பீட்டு நிறுவனத்தில் வேலை- முழு விவரம்!





















