மேலும் அறிய

TNPSC Group4 Exam: உடனே கிளம்புங்க! தமிழ்நாடு முழுவதும் இன்னும் சற்று நேரத்தில் குரூப் 4 தேர்வு தொடக்கம்

TNPSC Group4 Exam:டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான புதிய விதிமுறைகள் பற்றிய விவரத்தை காணலாம்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணிகளுக்கான 6,244 காலி இடங்களுக்கு நடத்தப்படும் தேர்வு இன்று(09.06.2024) நடைபெற இருக்கிறது. 

குரூப் 4 தேர்வு 

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான இடங்களும் இதிலேயே சேர்க்கப்பட்டுள்ளன. இந்த முறை பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-வது தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். கடந்த மே 27-ம் தேதி இதற்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. 

 தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரை

  • விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்கு முன்னரே தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு உடன் வருகைதர வேண்டும்.
  • காலை 09.00 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், 12.45 மணிக்கு தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதி கிடையாது.
  • தேர்வு எழுதும் அறைக்குள் செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம், புளூடூத் சாதனங்கள் போன்ற மின்னணு உபயோகப் பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை.
  • தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வருவது கூடுதல் சிறப்பு என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
  • ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு கூடத்திற்குள் அல்லது வெளியே விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடும் பட்சத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், தேர்வாணையத்தால் தக்கதென கருதப்படும் காலம் வரையில் தேர்வு எழுதுவதிலிருந்து தேர்வர்கள் விலக்கி வைக்கப்படுவர்.
  • தேர்வர்கள் ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை தேர்வு எழுதும்போது கொண்டு வர வேண்டும்‌.

இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள புதிய அறிவுறுத்தல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று காலையிலேயே 3 பேர்: விஷச் சாராய பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு 
இன்று காலையிலேயே 3 பேர்: விஷச் சாராய பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு 
Public Examinations Act: அடுத்தடுத்து கசிந்த வினாத்தாள்கள் - புதிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவு
Public Examinations Act: அடுத்தடுத்து கசிந்த வினாத்தாள்கள் - புதிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவு
CSIR UGC NET Exam: தவிர்க்க முடியாத சூழல் -  CSIR-UGC-NET தேர்வை ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
CSIR UGC NET Exam: தவிர்க்க முடியாத சூழல் - CSIR-UGC-NET தேர்வை ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
The GOAT: ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்.. டபுள் ஆக்‌ஷனில் மிரட்டும் விஜய்.. GOAT பட அப்டேட் இதோ!
ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்.. டபுள் ஆக்‌ஷனில் மிரட்டும் விஜய்.. GOAT பட அப்டேட் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று காலையிலேயே 3 பேர்: விஷச் சாராய பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு 
இன்று காலையிலேயே 3 பேர்: விஷச் சாராய பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு 
Public Examinations Act: அடுத்தடுத்து கசிந்த வினாத்தாள்கள் - புதிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவு
Public Examinations Act: அடுத்தடுத்து கசிந்த வினாத்தாள்கள் - புதிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவு
CSIR UGC NET Exam: தவிர்க்க முடியாத சூழல் -  CSIR-UGC-NET தேர்வை ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
CSIR UGC NET Exam: தவிர்க்க முடியாத சூழல் - CSIR-UGC-NET தேர்வை ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
The GOAT: ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்.. டபுள் ஆக்‌ஷனில் மிரட்டும் விஜய்.. GOAT பட அப்டேட் இதோ!
ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்.. டபுள் ஆக்‌ஷனில் மிரட்டும் விஜய்.. GOAT பட அப்டேட் இதோ!
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நேரில் ஆறுதல் சொன்ன அமைச்சர்!
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நேரில் ஆறுதல் சொன்ன அமைச்சர்!
HBD Devayani: கடைசி வரை நோ! சூர்யவம்சம் பாணியில் ராஜகுமாரனை திருமணம் செய்த தேவயானி!
HBD Devayani: கடைசி வரை நோ! சூர்யவம்சம் பாணியில் ராஜகுமாரனை திருமணம் செய்த தேவயானி!
Rasipalan: மிதுனத்துக்கு ஜெயம், கடகத்துக்கு கனிவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மிதுனத்துக்கு ஜெயம், கடகத்துக்கு கனிவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
T20 World Cup ENG vs RSA: சூப்பர் 8 சுற்று.. கடைசிவரை போராடிய இங்கிலாந்து.. தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!
T20 World Cup ENG vs RSA: சூப்பர் 8 சுற்று.. கடைசிவரை போராடிய இங்கிலாந்து.. தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!
Embed widget