TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
TNPSC Group 4 Exam: நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் மேலும் 480 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 6, 244 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் கூடுதலாக 480 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குரூப் 4 தேர்வு:
கடந்த ஜூன் 9ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
2024ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர். இதற்கிடையே இந்த முறை புதியதாக இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு
இந்நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த தருணத்தில் கூடுதலாக 480 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Combined Civil Services Examination IV (Group IV Services) - Notification No.01/2024. Addendum 1A/2024, dated 11.09.2024 - Addendum hosted in the Commission's website https://t.co/Tm3Oywzaw9 - Additional Vacancies Notified: 480.
— TNPSC (@TNPSC_Office) September 11, 2024
For details, click:- https://t.co/6OSnDcjDeW pic.twitter.com/eCsiFLR3G9