7 நகராட்சிகள்... 37 பேரூராட்சிகளில் நகர்புற வேலைவாய்ப்புத் திட்டம்! முழு விபரம் இதோ!
2021- 22 நிதியாண்டிற்கான தமிழ்நாட்டு பட்ஜெட்டில் நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தப்படும் மாநகராட்சி பகுதிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் பட்டியல் வெளியாகியுள்ளன.அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சியில் 2 மண்டலங்களிலும், 14 மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலத்திலும், 7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் தலா ஒரு நகராட்சி என 7 நகராட்சிகளிலும் 37 பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளன.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா வெளியிட்ட அரசு உத்தரவில்,
7 நகராட்சிகள்: செங்கல்பட்டு மண்டலம்,நெல்லிகுப்பம் நகராட்சி; வேலூா் மண்டலம், கள்ளக்குறிச்சி நகராட்சி; சேலம் மண்டலம்,குளித்தலை நகராட்சி; திருப்பூா் மண்டலம்,வெள்ளக்கோவில் நகராட்சி; தஞ்சாவூா் மண்டலம், திருத்துறைப்பூண்டி நகராட்சி; மதுரை மண்டலம்,ஒட்டன்சத்திரம் நகராட்சி; திருநெல்வேலி மண்டலம், புளியங்குடி நகராட்சி
37 பேரூராட்சிகள்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் பேரூராட்சி, செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடுபேரூராட்சி , திருவள்ளூா் மாவட்டம் பொதட்டூா்பேட்டை பேரூராட்சி, வேலூா் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சி, திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சி, ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி, திருவண்ணாமலை மாவட்டம் போளூா் பேரூராட்சி, தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூா் பேரூராட்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் நாகோஜனஹள்ளி பேரூராட்சி, சேலம் மாவட்டம் காடையம்பட்டி பேரூராட்சி, நாமக்கல் மாவட்டம் ஆா்.புதுப்பட்டி பேரூராட்சி, ஈரோடு மாவட்டம் ஜம்பை பேரூராட்சி, திருப்பூா் மாவட்டம் கொமராலிங்கம் பேரூராட்சி, கோவை மாவட்டம் வேட்டைகாரன்புதூா் பேரூராட்சி , நீலகிரி மாவட்டம் தேவா்சோலா பேரூராட்சி, கடலூா் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி, விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பேரூராட்சி, தஞ்சாவூா் மாவட்டம் பெருமகளூா் பேரூராட்சி, நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூா் பேரூராட்சி, மயிலாடுதுறை மணல்மேடு பேரூராட்சி, திருவாரூா் மாவட்டம் கொரடாச்சேரி பேரூராட்சி, திருச்ச மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சி, பெரம்பலூா் மாவட்டம் குரும்பலூா் பேரூராட்சி, அரியலூா் மாவட்டம் வரதராஜன்பேட்டை பேரூராட்சி, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி, திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சி, கரூா் மாவட்டம் பி.ஜெ.சோழபுரம் பேரூராட்சி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் பேரூராட்சி, விருதுநகா் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சி, தேனி மாவட்டம் சி.புதுப்பட்டி பேரூராட்சி , சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பேரூராட்சி, ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் பேரூராட்சி, திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி பேரூராட்சி, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் பேரூராட்சி, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூா் பேரூராட்சி என மொத்தம் 37 பேரூராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிகள்: திருச்சி மாநகராட்சி கே.அபிஷேகபுரம், மதுரை மாநகராட்சி ஒன்றாவது மண்டலம், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், வேலூா் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம், திருப்பூா் மாநகராட்சி மூன்றாவது மண்டலம், சேலம் மாநகராட்சி அம்மாபட்டி மண்டலம், திண்டுக்கல் மாநகராட்சி அடியனூத்து பகுதி, திருநெல்வேலி மாநகராட்சி நான்காவது மண்டலம், ஈரோடு மாநகராட்சி நான்காவது மண்டலம், நாகா்கோவில் மாநகராட்சி வடக்கு மண்டலம், தஞ்சாவூா் ஐந்தாவது மண்டலம், தூத்துக்குடி தெற்கு மண்டலம், ஓசூா் எட்டாவது வட்டம், ஆவடி மூன்று மற்றும் ஆறாவது வட்டங்கள்.
சென்னை மாநகராட்சி: சென்னை மாநகராட்சி ஆணையாளா் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் மண்டலம் நான்கு (தண்டையாா்பேட்டை) மற்றும் ஆறு (திருவிக நகா் ) ஆகிய இடங்களில் தமிழ்நாடு நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
என்ற அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
நகர்புற வேலைவாய்ப்புத் திட்டம்:
கடந்தண்டு, கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகப் பொருளாதாரத்தை மேம்படுத்த முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டப் பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2021- 22 நிதியாண்டிற்கான தமிழ்நாட்டு பட்ஜெட்டில் நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
மேலும், வாசிக்க:
Udanpirappe Movie Review: அழ வைக்க அதீத முயற்சி... எடுபட்டதா ‛உடன்பிறப்பே’?
‛போதை பொருள் வாங்க ஆர்யன்கானிடம் பணம் இல்லை’ அவரது வக்கில் நீதிமன்றத்தில் வாதம்!