8ம் வகுப்பு தேர்ச்சி ஆனால் போதும்.. தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு! விவரம் இதுதான்!
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
![8ம் வகுப்பு தேர்ச்சி ஆனால் போதும்.. தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு! விவரம் இதுதான்! Tamil Nadu Information Commission job Notification 8ம் வகுப்பு தேர்ச்சி ஆனால் போதும்.. தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு! விவரம் இதுதான்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/30/b355f5d7adcad9076eb09db62d6ed8a3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளது. தமிழ்நாடு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களுக்கு அந்தந்த பிரிவினருக்கு உரிய வயது வரம்பிலிருந்து தளர்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
அலுவல உதவியாளர் / Office Assistant
கல்வித் தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி
எப்படி விண்ணப்பிப்பது:
தேவையான சான்றிதழ்களுடன், இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
ஊதியம்:
ரூ.15.700-ரூ.58,100 மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
முகவரி:
செயலாளர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
என்.19, அரசு பண்ணை இல்லம் போன்பேட் நந்தனம்,
சென்னை-35
email : sic[at]nic[dot]in Phone: 044-29515590
விண்ணப்பிக்க கடைசி தேதி - 02/09/2022
www.sic.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யவும்.
கவனிக்க:
விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். மேலும், தேவைப்படின் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வும் நடத்தப்படும் என வேலைவாய்பு குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பின் முழு விவரத்திற்கு- http://www.tnsic.gov.in/pdf/OA_Notification.pdf
விண்ணப்ப படிவம் - http://www.tnsic.gov.in/pdf/OA_Advertisement.pdf
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)