(Source: ECI/ABP News/ABP Majha)
தெற்கு ரயில்வேயில் அப்ரெண்டிஸ் பணி; 2,860 இடங்கள் - விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!
Southern Railway Recruitment: மாத உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை காணலாம்.
தெற்கு ரயில்வேயின் (Southern Railway) கோயம்புத்தூர், பெரம்பூர், திருவனந்தபுரம், பாலகாடு, சேலம், அரக்கோணம், ஆவடி,தாம்பரம், ராயபுரம் சென்னை, பொன்மலை, மதுரை, ஆகிய கோட்டங்களில் ரயில்வே பணிமனைகளில் மாத உதவித்தொகையுடன் இரண்டு ஆண்டுகள் தொழில் பழகுநர் பயிற்சிக்கான (Apprenticeship) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 28-ம் தேதி கடைசி நாள்.
இதன் மூலம் பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனை ஆய்வகம் மற்றும் பணிமனைகளில் உள்ள எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளில் உள்ள பதவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
டீசல் மெக்கானிக், எலக்ட்ரிசியன், ஃபிட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், வெல்டர், வயர் மேன், பெயிண்டர், உள்ளிட்ட பணியிடங்களுக்கும், மருத்துவ ஆய்வகத்தில் உள்ள ரேடியாலஜி, இதய மருத்துவம் ஆகிய பிரிவுகளில் ஆய்வக உதவியாளர் ஆகிய துறைகளிலும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பணி விவரம்
Trade Apprentice
மொத்த பணியிடங்கள் - 2860
கல்வித் தகுதி
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 10 +2 என்ற முறையில் பன்னிரெண்டாம் வகுப்பு , ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி காலம்
- ஃபிட்டர்: ஓராண்டு காலம்
- வெல்டர் மற்றும் எலக்ட்ரிக் - ஓராண்டு மற்றும் மூன்று மாதங்கள்
- ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் - ஓராண்டு மூன்று மாதங்கள்
வயதுவரம்பு
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 15 வயது முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். ஐ.டி.ஐ. முடித்தவர்கள் 15 வயது பூர்த்தியடைந்தவர்களாவும் முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ. படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
உதவித் தொகை
பயிற்சியின்போது பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.6000, ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
இந்தத் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ரூ.100. செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். பழங்குடியின/ பட்டியிலன பிரிவினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf - என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
கவனிக்க..
விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண்ணை வழங்குமாறும், இ-மெயில் எண்ணை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வலைதள முகவரியாக www.sr.indianrailways.gov.in -என்ற லிங்கில் கூடுதல் விவரங்களை பெறலாம். இந்தப் பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படாது என்பதையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள், இளங்கலை பட்டம் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.02.2024