மேலும் அறிய
10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை... மதுரையில் நாளை வேலை வாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணாதீங்க
இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது.

வேலைவாய்ப்பு முகாம்
Source : whats app
மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.02.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் 30க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.incrivatejobs.tn. gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.
என்ன கொண்டுவரவேண்டும்
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை நாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள். குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் 21.02.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மதுரை. கோபுதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும். இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர். டாக்டர் கா.சண்முகசுந்தர் தெரிவிக்கின்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Online Part Time Job வேலை தருவதாகக் கூறி ரூ.52 லட்சம் மோசடி.. 3 பேரை தட்டி தூக்கிவந்த மதுரை தனிப்படை !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - போக்சோவில் சிக்கிய பூசாரி.. கோயிலை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு ! நடந்தது என்ன?
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















