Plant Nursery Training Course : செடிகள் வளர்க்க, விற்க ஆர்வமா.!! ஒரு மாத கால இலவச பயிற்சி- உடனே விண்ணப்பிக்க- ஆட்சியர் அழைப்பு
Plant Nursery Training Course : தாவரநாற்றங்கால் உதவியாளருக்கான 30 நாட்கள் இலவச திறன் மேம்பாட்டுப்பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தாவர நாற்றங்கால் பயிற்சி
எலக்ட்ரானிக் யுகத்தின் வேகத்திற்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு மனது நிம்மதியாக ஓய்வு கொடுப்பது இயற்கை தான். எனவே மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் மக்கள் அழகிய செடிகளை பார்த்து ரசிப்பார்கள். தங்கள் வீட்டில் இது போன்ற செடிகளை வளர்க்க முடியாதா.? ஏன ஏங்கி தவிப்பார்கள். எனவே இயற்கையோடு பழகிடும் வகையில் செடிகளை வளர்க்கவும். அதனை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கவும் அரசின் சார்பில் சூப்பரான வாய்ப்பானது வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு மாத கால இலவச பயிற்சி
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில், தாவரநாற்றங்கால் உதவியாளருக்கான இலவச திறன் மேம்பாட்டுப்பயிற்சி தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையம், மாதவரம், சென்னை-51ல் வழங்கப்படுகிறது. தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் இணைந்து பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY 4.0) திட்டத்தின் கீழ் தாவர நாற்றங்கால் உதவியாளருக்கான திறன் மேம்பாட்டுப்பயிற்சி 11.03.2026 முதல் 17.04.2026 வரை 30 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையம், மாதவரத்தில் இந்த பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். ITI, Diploma, இளங்கலை மற்றும் முதுகலை படித்த வேலையில்லாத 18 முதல் 45 வரை வயதுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தாவர நாற்றங்கால் அமைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த களப்பயிற்சியும் அளிக்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் தோட்டக்கலை அலுவலர் (9944209417) மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் (8489742975) ஆகியோரின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்கள் மற்றும் பதிவிற்கு தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையம், அருள்நகர், மாதவரம், சென்னை-51 அலுவலகத்தில் ஆதார் நகலுடன் நேரில் வந்தும் பயனடைய கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















